Connect with us

தமிழ் மக்களின் கருப்பு சூரியனை காலன் கொண்டு சென்றது – கேப்டன் விஜயகாந்த் காலமானார்!.

vijayakanth

News

தமிழ் மக்களின் கருப்பு சூரியனை காலன் கொண்டு சென்றது – கேப்டன் விஜயகாந்த் காலமானார்!.

Social Media Bar

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஏழைகளின் துயர் நீக்கியவராகவும் வள்ளலாகவும் அறியப்படுபவர் விஜயகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டங்களில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்ததால் தொடர்ந்து மக்களுக்கு நல்ல உணவு கொடுக்க வேண்டும் என்பதை கோட்பாடாக கொண்டிருந்தார்.

இதனால் அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும்  3 லட்ச ரூபாயை உணவு செலவுக்காக சம்பளத்தில் இருந்து கொடுத்து விடுவார். அதை கொண்டு தினமும் பணியாளர்களுக்கு கறி சாப்பாடு போட வேண்டும். அதைதான் விஜயகாந்தும் சாப்பிடுவார். இது விஜயகாந்த் படத்தில் உள்ள விதிமுறையாகும்.

vijayakanth
vijayakanth

பிறகு அரசியலுக்கு வந்தார் விஜயகாந்த். மிகவும் வெற்றிக்கரமாக எதிர்க்கட்சி தலைவராகவும் ஆனார். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து அவரது அரசியல் பயணத்திற்கு ஒத்துழைக்கவில்லை. உடல் பாதிப்பு காரணமாக அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார் விஜயகாந்த்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சனை காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் விஜயகாந்த். அங்கு சிகிச்சை பெற்றவர் நலமாகி வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று மீண்டும் உடல் நல பிரச்சனையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Vijayakanth-1-1
Vijayakanth-1-1

அவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்ட்டிருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வெண்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மருத்துவம் அளித்து வரும் நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. உடல் பின்னடைவை சந்தித்து வருகிறது என கூறப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் விஜயகாந்த். தமிழ் சினிமாவின் மிகப்பெரும் சகாப்தமாக வாழ்ந்த இந்த மனிதரின் இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மியாட் மருத்துவமனையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விஜயகாந்தின் கட்சி அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் கட்சி ஆட்கள் கூடி வருகின்றனர். இந்த இழப்பு தமிழக மக்களுக்கும் திரை உலகிற்கும் ஒரு ஈடு செய்ய முடியா இழப்பாக அமைந்துள்ளது.

To Top