Connect with us

கமுக்கமாக கல்யாணத்தை முடித்த கவின் – வெளியான புகைப்படங்கள்!..

News

கமுக்கமாக கல்யாணத்தை முடித்த கவின் – வெளியான புகைப்படங்கள்!..

Social Media Bar

சின்ன திரையில் பிரபலமாக உள்ள டிவி சேனல்களில் முக்கியமான சேனலாக விஜய் டிவி உள்ளது. விஜய் டிவி மூலமாக பல பிரபலங்கள் தமிழ் சினிமாவில் பெரும் இடத்தை தொட்டுள்ளனர். விஜய் டிவியில் ஒளிப்பரபாகும் சில நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும்.

அப்படியாக பிக்பாஸ் நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் திரைத்துறையில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன.

அந்த வகையில் ஒரு காலத்தில் பிக் பாஸில் இருந்தவர்தான் நடிகர் கவின். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாவதற்காக முயற்சித்து வந்தார். அதனை தொடர்ந்து லிஃப்ட், டாடா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

டாடா திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த நிலையில் தற்சமயம் திருமணம் செய்துள்ளார் கவின். நீண்ட நாளாக இவர் மோனிகா என்கிற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்சமயம் அவரையே கரம் பிடித்துள்ளார் கவின். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

To Top