Tamil Cinema News
இனிமே முதல் நாள் பட விமர்சனம் வரக்கூடாது.. தயாரிப்பாளர்கள் போட்ட புது விதிமுறை..!
பொதுவாகவே திரைப்படங்கள் முதல் நாள் வெளியாகும் பொழுதே திரைப்பட விமர்சனங்கள் என்பது இப்பொழுது முக்கிய விஷயமாக மாறிவிட்டது.
முன்பெல்லாம் திரைப்படங்கள் வெளியானது என்றால் மக்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு சென்று திரைப்படங்களை பார்ப்பார்கள். ஏனெனில் அப்பொழுது எல்லாம் இணையதளத்தின் வசதியே கிடையாது என்பதால் ஒரு திரைப்படத்தின் டிரைலரை பார்ப்பதே கடினமான விஷயமாக இருக்கும்.
முதல் நாள் ஷோ:
சின்னத்திரையில் அவ்வப்போது போடும் பொழுது மட்டும் நான் திரைப்படங்களின் பெயரையே பார்க்க முடியும். ஆனால் இப்பொழுது சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தின் வளர்ச்சியின் காரணமாக ஒரு படம் வெளியாகும் போது அந்த திரைப்படம் குறித்த விமர்சனங்கள் அதிகமாக வெளியாகின்றன
முதல் நாளே வருகிற விமர்சனங்கள் திரைப்படத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று தொடர்ந்து விமர்சனம் வரும் பொழுது அந்த திரைப்படத்தில் பெரிய நடிகர்கள் நடிக்கவில்லை என்றாலும் கூட அந்த படம் வெற்றி அடைகிறது.
தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை:
அதே சமயம் பெரிய நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இதே விமர்சனங்களால் தோல்வியை தழுவுகின்றன உதாரணத்திற்கு லப்பர் பந்து, பார்க்கிங் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் முதல் நாள் வந்த நல்லவிதமான விமர்சனத்தின் காரணமாக அதிக வரவேற்பை பெற்றன.
அதே சமயம் தங்குவா மாதிரியான பெரிய திரைப்படங்கள் அடி வாங்குவதற்கும் இந்த முதல் நாள் விமர்சனம் காரணமாக இருக்கிறது இது தயாரிப்பாளர்களை வெகுவாக பாதிப்பதால் இனி முதல் நாள் திரையரங்குகளுக்கு வெளியே நின்று யூட்யூப்பர்கள் விமர்சனம் அளிப்பதற்கு திரையரங்குகள் அனுமதிக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
மேலும் முதல் நாள் முதல் ஷோவில் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் விமர்சனம் கொடுப்பதை பார்க்க முடியும் அதையும் தடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறி வருகின்றனர்.
