Connect with us

அந்த நிலையிலும் கேப்டன்கிட்ட எதையும் சொன்னது கிடையாது!.. சண்டை காட்சிகள் குறித்து பேசிய தளபதி தினேஷ்!.

vijayakanth thalapathy dinesh

News

அந்த நிலையிலும் கேப்டன்கிட்ட எதையும் சொன்னது கிடையாது!.. சண்டை காட்சிகள் குறித்து பேசிய தளபதி தினேஷ்!.

Social Media Bar

கருப்பாய் இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை பெற முடியும் என நிரூபித்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் பெரும்பாலான படங்கள் சிம்பிளான கதை களங்களைதான் கொண்டிருக்கும்.

அதிகப்பட்சம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களாகதான் விஜயகாந்தின் திரைப்படங்கள் இருக்கும். அதே போல தமிழ் சினிமாவில் 40க்கும் அதிகமான புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்தவர் விஜயகாந்த் மட்டுமே.

ஆரம்பத்தில் அவரது திரைப்படங்களில் சண்டை காட்சிகள் இருக்கும் என்றாலும் சண்டை காட்சிகளே இல்லாத திரைப்படங்களிலும் கூட அவர் நடித்திருக்கிறார். ஆனால் பிற்கால விஜயகாந்த் இதிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவராக இருந்தார். கேப்டன் பிரபாகரன் திரைப்படங்களுக்கு பிறகு அவரது படங்களில் சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.

vijayakanth
vijayakanth

அதிகமாக சண்டை காட்சிகள் என்பது விஜயகாந்தின் திரைப்படங்களில் முக்கிய அம்சமாக ஆகியிருந்தது. அப்போது நடந்த அனுபவங்கள் குறித்து சண்டை பயிற்சியாளர் தளபதி தினேஷ் கூறியுள்ளார். பொதுவாக மற்ற நடிகர்களுடன் சண்டை காட்சிகள் என்றால் சாதாரணமாக சென்று நடித்து விடுவோம்.

ஆனால் விஜயகாந்துடன் சண்டை என்றால் மட்டும் 5 நாட்களுக்கு முன்பிருந்தே அதற்கு தயாராக துவங்கிவிடுவோம். ஏனெனில் விஜயகாந்துடன் சண்டை என்றால் பல கோணங்களில் அந்த காட்சிகள் படமாக்கப்படும். அதனால் பலமுறை அடிவாங்க வேண்டி இருக்கும். அதனால் உடலில் வலி ஏற்பட்டாலும் கேப்டனுடன் நடிக்கிறோம் என்பதால் மனதிற்குள் சந்தோஷமாகதான் இருக்கும்.

இருந்தாலும் ஒரு முறைக்கூட எங்களுக்கு வலிக்கிறது என கேப்டனிடம் கூறியது கிடையாது. ஏனெனில் அவருக்கு அது மன வருத்ததை அளிக்கும். அதனால் அவரிடம் சொல்ல மாட்டோம் என்கிறார் தளபதி தினேஷ்!.

To Top