News
திருமணம் முடிந்ததுமே தம்பி ராமய்யா போட்ட கண்டிஷன்!.. அதிருப்தியில் அர்ஜுன்..
தமிழ் சினிமாவில் நீண்ட நெடுங்காலங்களாகவே பயணித்து வருபவர் தம்பி ராமய்யா. படங்களில் நடித்தது மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார் தம்பி ராமய்யா. ஆனால் இவர் இயக்கிய திரைப்படங்கள் பலவும் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதையே முக்கிய தொழிலாக்கி கொண்டார். இதனையடுத்து வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்தார். சமீபத்தில் நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமய்யா மகன் உமாபதிக்கும் இடையே திருமணம் நடைப்பெற்றது.
தம்பி ராமய்யா கண்டிஷன்:
திரைப்பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்துக்கொண்டனர். நடிகர் விஷால், சமுத்திரக்கனி, விஜயக்குமார், போன்ற சில முக்கிய பிரபலங்கள் இவர்கள் திருமணத்திற்கு வந்திருந்தனர். அர்ஜுன் அவரே கட்டிய அந்த ஆஞ்சினேய கோவிலில்தான் இந்த திருமணத்தை நடத்தினார்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு என்னதான் ஐஸ்வர்யா கதாநாயகியாக இருக்கிறார் என்றாலும் இனி திருமணத்திற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க கூடாது என கூறியுள்ளார் தம்பி ராமய்யா. ஐஸ்வர்யாவும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
ஆனால் அர்ஜுன் மற்றும் பெண் வீட்டாருக்கு இந்த விதிமுறை கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஐஸ்வர்யா இதற்கு மறுப்பு தெரிவிக்காத காரணத்தினால் இது பெரும் பிரச்சனை ஆகவில்லை.
