பாலிவுட்டில் பிரபல நடிகரான இம்ரான்கானுக்கும் தமிழ் நடிகைக்கும் இடையே சமீபத்தில் காதல் ஏற்பட்டுள்ளது.
பாலிவுட்டில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் இம்ரான்கான். இவர் நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகை ஜெனிலியாவிடனும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அவந்திகா மாலின் என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
தமிழ் நடிகையுடன் காதல்:
இதனால் சில நாட்கள் இவர் மன வருத்தத்தில் இருந்தார். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது அவந்திகாவை பிரிந்த பிறகு ஒருவாரம் நான் எங்கும் வெளியிலேயே செல்லவில்லை. மாறாக வீட்டில் கதவுகளை பூட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தேன் என்கிறார்.

இந்த நிலையில் எனக்கும் நடிகை லேகா வாஷிங்டனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பிறகு அதுவே காதலாக மாறியது. கொரோனா சமயத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாகதான் இருந்தோம். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார் நடிகர் இம்ரான்கான்.
நடிகை லேகா வாஷிங்டன் தமிழில் ஜெயம் கொண்டான், வேதம், கல்யாண சமையல் சாதம் என பல படங்களில் நடித்திருக்கிறார்.






