News
மார்கெட்டில் விலை போகாமல் இருக்கும் தங்கலான்.. நெட்ஃப்ளிக்ஸ் எடுத்த முடிவு..!
மாபெரும் எதிர்பார்ப்போடு தமிழ் மக்கள் மத்தியில் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படம் கதை ரீதியாக நிறைய பார்வையை கொண்டிருந்தது. ஒரு பக்கம் தங்கத்தை அடைய நடக்கும் போராட்டம் என்பதாக கதை தெரியும்.
இன்னொரு பக்கம் பார்த்தோம் என்றால் காலம் காலமாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒவ்வொரு ஜென்மமாக நடக்கும் பிரச்சனை என்பதாகவும் இந்த கதை தெரியும். அதை பார்ப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்களோ அப்படி தங்கலானின் கதை இருக்கும்.
தங்கலான் படத்தில் பிரச்சனை:
ஆனால் பொது மக்களை பொருத்தவரை பலருக்கும் தங்கலான் திரைப்படம் புரியவே இல்லை. படத்தில் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை அவர்கள் பேசும் வசனங்களும் தெளிவானதாக இல்லை. இதனால் இந்த படம் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றால் கூட போகப் போக மக்கள் மத்தியில் வரவேற்பை இழந்தது.
எதிர்பார்த்த அளவு வசூலையும் கொடுக்கவில்லை ஒரு வேளை பொதுமக்களுக்கு புரியும் வகையில் படத்தை எடுத்து இருந்தால் வெற்றி பெற்று இருக்க வாய்ப்புகள் உண்டு. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஆரம்பத்தில் 55 கோடி கொடுத்து வாங்கி இருந்தது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம்.
ஆனால் இந்த படம் சரியாக போகவில்லை என்பதால் தற்சமயம் அதன் விலையை குறைக்க வேண்டும் என்று நெட்ஃப்ளிக்ஸ் கேட்டிருக்கிறது அதனால் பட குழுவுக்கும் netflix-கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
எனவே தங்கலான் இன்னமும் ஓ.டி.டியில் வெளியாகாமல் இருந்து வருகிறது இந்த நிலையில் சமரசத்திற்கு வந்த படகுழு இறுதியாக 35 கோடிக்கு படத்தை பேசி முடித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே தீபாவளிக்கு தங்கலான் திரைப்படம் ஓ.டி.டியில் வரும் என்று கூறப்படுகிறது.
