News
ஆர்த்தியை பார்த்து ஜெயம் ரவி பயந்து எடுத்த முடிவுதான் இது.. விவகாரத்து விஷயத்தில் அதை கவனிச்சீங்களா..!
நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. வெகு காலங்களாகவே ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்கிற செய்தி ஒரு பேச்சாக இருந்து வந்தது.
ஆனால் அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவராத காரணத்தினால் கொஞ்ச நாட்களிலேயே அந்த பேச்சு மட்டுப்பட்டு போனது அதுவும் இல்லாமல் சமீபத்தில் கேரளாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பான பேச்சுக்கள் அதிகமாக இருந்து வந்ததால் அனைவரும் ஜெயம் ரவி விவாகரத்து குறித்த செய்தியை மறந்து விட்டனர்.

ஜெயம் ரவி விவாகரத்து:
இந்த நிலையில் பல சர்ச்சைகளுக்கு நடுவே தற்சமயம் ஜெயம் ரவியே அவர்கள் இருவரும் பிரிய போவதை உறுதி செய்து இருக்கிறார். ஆனால் அந்த செய்தியில் சுற்றி இருப்பவர்களின் நலன் கருதியே அவர் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருப்பது அனைவருக்கும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அப்படி ஜெயம் ரவியின் மனைவி அவரை சுற்றியுள்ள நபர்களுக்கு என்ன கெடுதல் செய்துவிட்டார் என்று தெரியவில்லையே என்று கூறி வருகின்றனர். விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் என்று ஜெயம் ரவி நினைக்கும் அளவிற்கு சென்றுள்ளார் என்றால் அப்படி ஏதோ ஒரு பெரிய தவறை அவரை சுற்றியுள்ள நபர்களுக்கு ஆர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் ஜெயம் ரவியின் பக்கம் தவறுகள் இருக்காது என்பது ஒரு பக்கம் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
