Connect with us

சொந்தமா ஜெட் வெச்சுக்குற அளவு பணக்காரி!.. நயன்தாரா விமானத்தின் விலை என்ன தெரியுமா?

nayanthara vignesh shivan

Cinema History

சொந்தமா ஜெட் வெச்சுக்குற அளவு பணக்காரி!.. நயன்தாரா விமானத்தின் விலை என்ன தெரியுமா?

Social Media Bar

தமிழில் உள்ள டாப் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி ஆவார்.

தமிழில் முதன்முதலாக ஐயா திரைப்படம் மூலமாக அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திற்கே ரஜினிகாந்துடன் சேர்ந்து சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து வாய்ப்புகளை பெற்ற நயன்தாரா இதுவரை தமிழில் பிரபலமாக உள்ள அனைத்து நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்து விட்டார்.

இதற்கு நடுவே நயன்தாரா காதல் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. நயன்தாரா சிம்புவுடன் ஏற்பட்ட காதல், நயன்தாரா பிரபுதேவாவுடன் ஆன காதல் இப்படி பல சர்ச்சைகள் தமிழ் சினிமாவில் நயன்தாரா குறித்து ஏற்பட்ட போதிலும் அவருக்கான மார்க்கெட் மட்டும் இன்னும் குறையவே இல்லை.

தென்னிந்திய சினிமா நடிகைகளிலேயே தனக்கென ஒரு பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் கதாநாயகி நயன்தாராதான். தற்சமயம் பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியிருக்கும் நயன்தாரா தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார். அவர் வைத்திருக்கும் இந்த ஜெட் விமானத்தின் மதிப்பு ரூபாய் 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது இல்லாமல் சில விலை உயர்ந்த கார்களும் இவரிடம் உள்ளன. தென்னிந்திய சினிமாவிலேயே இவ்வளவு பணமும் சம்பளமும் வாங்கும் நடிகையாக இருப்பவர் நயன்தாரா மட்டுமே.

To Top