News
கோட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் கிடையாது.. நல்ல வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்..!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் கோட் படத்தின் புதிய புதிய அப்டேட் கிடைத்து ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது.
அந்த வகையில் கோட் திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக மற்றொரு முன்னணி நடிகர் நடிக்க இருந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் நடிக்கும் கோட் திரைப்படம்
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களின் ஒருவர் வெங்கட் பிரபு. இவரின் இயக்கத்தில் வெளிவந்த சரோஜா, சென்னை 28, மங்காத்தா, மாநாடு ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படங்கள் ஆகும்.
அந்த வகையில் தற்போது விஜயுடன் கைகோர்த்திருக்கும் வெங்கட் பிரபு கோட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் வயதான, நடுத்தரமான, இளமையான மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏஜிஎஸ் நிறுவனம் கோட் திரைப்படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
படத்தின் பாடல் மற்றும் விஜயின் தோற்றங்கள் வெளிவந்து பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்நிலையில் கோட் திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருப்பதால் படத்திற்கான பணிகள் முடிந்து தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. மேலும் தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் அளித்திருப்பதும், படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதாகவும் தகவல் கசிந்தது.
தற்போது இந்த படத்தை பற்றிய அப்டேட் ஒன்று கிடைத்து அது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
கோட் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்

கோட் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்கள் ரஜினி மற்றும் தனுஷாம். தந்தை கதாபாத்திரத்தில் ரஜினியும், மகன் கதாபாத்திரத்தில் தனுஷூம் நடிக்க இருந்ததாகவும், அதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு டீ ஏஜிங் தொழில்நுட்பம் பற்றி தெரிய வர உடனே விஜய்க்கு இந்த படத்தின் கதையை கூறி ஓகே செய்துவிட்டாராம். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
