Connect with us

கவர்னருக்கு மட்டும்தான் மேலே போக அனுமதியுண்டு.. எம்.ஜி.ஆருக்கெல்லாம் கிடையாது… மக்களை வைத்தே ரூல் ப்ரேக் செய்த இயக்குனர்!..

MGR

Cinema History

கவர்னருக்கு மட்டும்தான் மேலே போக அனுமதியுண்டு.. எம்.ஜி.ஆருக்கெல்லாம் கிடையாது… மக்களை வைத்தே ரூல் ப்ரேக் செய்த இயக்குனர்!..

Social Media Bar

Actor MGR: எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களிலேயே ஒரு ஜாலியான திரைப்படம் என்றால் அது அன்பே வா திரைப்படம்தான். பொதுவாக திரைப்படங்களில் மக்களை காக்கும் தலைவனாகவும், அநீதிக்கு எதிராக போராடுபவராகவும்தான் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார்.

ஆனால் அவர் ஒரு காதல் நாயகனாக ஜாலியான ஆளாக அன்பே வா திரைப்படத்தில்தான் நடித்தார். அதே போல ஏ.வி.எம் நிறுவனத்தோடு இணைந்து அவர் நடித்த ஒரே திரைப்படம் அன்பே வா மட்டுமே. அன்பே வா திரைப்படத்தை இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இயக்கினார்.

இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில்தான் படமாக்கப்பட்டது. காஷ்மீரில் மலை உச்சியில் பல காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டது. முக்கியமாக புதிய வானம் புதிய பூமி பாடலை மலை உச்சியில் படம்ப்பிடிக்க திட்டமிட்டனர்.

ஆனால் காஷ்மீர் சென்றப்போது அங்கு ஒரு பிரச்சனை இவர்களுக்கு காத்திருந்தது. காஷ்மீரின் மலை உச்சிக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் அங்கு வாகனத்தில் செல்ல கவர்னருக்கு மட்டுமே உரிமையுண்டு. வேறு எந்த நபருக்கும் உரிமை கிடையாது.

இதனால் எம்.ஜி.ஆரும் தினசரி நடந்துதான் மலைக்கு வர வேண்டும் என்கிற நிலை இருந்தது. அங்கு எம்.ஜி.ஆருக்காக பெரும் ரசிக கூட்டம் தினமும் கூடியது. இதனால் அவர் நடந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவதே மிகவும் தாமதமானது.

இந்த நிலையில் இதுக்குறித்து யோசித்த இயக்குனர் அங்கு கவர்னருக்கு ஒரு சிறப்பு விருந்தளிக்க முடிவு செய்தார். அதில் எம்.ஜி.ஆரையும் கலந்துகொள்ள செய்தார். அப்போது எம்.ஜி.ஆருக்காக வந்த ரசிக கூட்டத்தை பார்த்து கவர்னரே அதிர்ச்சியானார்.

இவ்வளவு கூட்டம் இருப்பதால் எம்.ஜி.ஆர் மலைக்கு நடந்து வருவது சிரமமாக உள்ளது. எனவே எம்.ஜி.ஆர் மட்டும் வாகனத்தில் மலை உச்சிக்கு வருவதற்கு கவர்னர் அனுமதி வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார் இயக்குனர். அதனை கண்ட கவர்னரும் அதற்கு அனுமதி வழங்கினார்.

பிறகு அதை வைத்தே படப்பிடிப்பு வண்டி வரை அனைத்தையும் மலை உச்சிக்கு கொண்டு சென்று படப்பிடிப்பை நடத்தியுள்ளார் இயக்குனர் எஸ்.பி முத்துராமன்.

To Top