Connect with us

இதுக்கு நான் தகுதியானவன் இல்லை!.. ரசிகையின் செயலால் அதிர்ச்சியடைந்த KPY பாலா!..

kpy bala

News

இதுக்கு நான் தகுதியானவன் இல்லை!.. ரசிகையின் செயலால் அதிர்ச்சியடைந்த KPY பாலா!..

Social Media Bar

KPY Bala: சின்ன திரையில் இருந்தாலும் கூட மக்களால் அதிகமாக பாராட்டப்படும் ஒருவராக விஜய் டிவி பாலா இருந்து வருகிறார். விஜய் டிவியில் காமெடி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து வரும் இவர் ஆரம்பம் முதலே மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறார்.

அதிலும் முக்கியமாக ஆதரவற்றை குழந்தைகள் முதியவர்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறார். மிகவும் தாமதமாகவே பாலா செய்யும் உதவிகள் மக்களுக்கு தெரிய துவங்கின. இதனையடுத்து பாலாவிற்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்க துவங்கியது.

அதே போல அதிகமாக சம்பாதிக்க துவங்கியதும் பாலா மக்களுக்கு செய்யும் நன்மைகளும் அதிகரிக்க துவங்கின. சென்னையில் மழைக்காரணமாக வெள்ளம் ஏற்பட்டப்போது அவரால் முடிந்த வகையில் மக்கள் பலருக்கும் பல வித உதவிகளை செய்ய துவங்கினார் பாலா.

அதே போல ஒரு ஊரில் தண்ணீர் சுத்தமாக இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதால் அங்கு தன்னுடைய செலவில் தண்ணீர் சுத்திக்கரிப்பு கருவியை பொறுத்தியுள்ளார் பாலா. இப்படி பல நன்மைகளை செய்வதால் லாரன்ஸ் மாதிரியான பெரும் பிரபலங்கள் கூட பாலாவை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பொது மக்கள் மத்தியிலும் பாலாவிற்கு நல்ல மரியாதை கிடைக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் பாலாவின் ரசிகை ஒருவர் தன்னுடைய கையில் கே.பி.ஒய் பாலா என பச்சை குத்தியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் பாலா.

அதில் அவர் கூறும்போது ஒரு பெண் எனது பெயரை பச்சை குத்தி இருப்பதை இடையில் பார்த்தேன். அவர் எனது பெயரை பச்சை குத்தும் அந்த பாசத்திற்கு நான் தகுதியானவனா என எனக்கு தெரியவில்லை. இந்த உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்களின் அன்பிற்கு எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

To Top