Cinema History
நடிகர் கலாபவன் மணி மரணத்தில் ஏற்பட்ட மர்மம்!.. வெளிவந்த புதிய தகவல்கள்!..
Kalabhavan Mani: சினிமாவில் வெகு காலங்களாக வில்லன் காமெடியன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் கலாபவன் மணி. இவர் நடித்த ஜெமினி, வேல், ஏய் மாதிரியான பல படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. தென்னிந்தியாவில் பல்வேறு மொழிகளில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மார்ச் 6, 2016 அன்று கலாபவன் மணி மரணம் எய்தினார். அப்போதைய சமயத்தில் அது இயற்கை மரணம் என்றே கருதப்பட்டது. யாருக்கும் அதுக்குறித்து ஐயம் இருக்கவில்லை. ஆனால் தற்சமயம் அது இயற்கையான மரணம் அல்ல. கலாபவன் மணி தற்கொலை செய்துக்கொண்டார் என்றே கூறப்படுகிறது.

தினசரி இவர் 12 முதல் 13 பீர் குடித்ததுதான் மரணத்திற்கான முக்கிய காரணம் என கேரளாவின் ஐ.பி.எஸ் அதிகாரி உன்னிராஜன் தகவல் அளித்துள்ளார்.
கலாபவம் மணியின் கல்லீரல் செயழிலக்க துவங்கியப்போதும் கூட அவர் பீர் குடிப்பதை நிறுத்தவே இல்லை. இறுதியாக ரத்த வாந்தி எடுக்கும் வரை வேண்டும் என்றே அவர் பீரை அருந்தியுள்ளார். அவரது மரணம் நிகழ்ந்த அன்றும் கிட்டத்தட்ட 12 பாட்டில் பீர் அருந்தியிருந்தார் என்று கூறப்படுகிறது.
