Connect with us

ஐயாயிரம் பேரை வச்சி கூட பாட்டு எடுப்போம்!.. கங்குவா படத்தில் நடந்த சம்பவம்!.. லியோ குழு இவங்கக்கிட்ட கத்துக்கணும்!..

vijay surya

News

ஐயாயிரம் பேரை வச்சி கூட பாட்டு எடுப்போம்!.. கங்குவா படத்தில் நடந்த சம்பவம்!.. லியோ குழு இவங்கக்கிட்ட கத்துக்கணும்!..

Social Media Bar

Leo Vijay : சினிமாவில் ஆரம்ப காலகட்டம் முதலே பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான பாடல் காட்சிகளை எடுப்பது என்பது இருந்து வருகிறது. பாடல்களில் இப்படி பிரமாண்ட காட்சிகளை பார்ப்பதற்கு அதிக விருப்பம் இருப்பதால் தொடர்ந்து அந்த மாதிரியான காட்சிகள் நிறைவே திரைப்படங்களில் எடுக்கப்பட்டுள்ளன.

அதில் ஒரு தொடர்ச்சியாக தற்சமயம் அதிக நபர்களை ஒரு பாடலில் ஆட வைப்பது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாகத்தான் லியோ திரைப்படத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களை ஆட வைத்து நான் ரெடிதான் வரவா என்கிற பாடலை உருவாக்கி இருந்தனர்.

அதில் அந்த நபர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டு அது இடையில் கூட ஒரு சர்ச்சையானது. இதே போல கங்குவா திரைப்படத்திலும் அதிக நபர்களை வைத்து பாடல் ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர்.

அதில் மிகவும் ட்ரிக்காக ஒரு வேலையை பார்த்திருக்கின்றனர். மொத்தமே இந்த பாடலில் 100 முதல் 150 நபர்களைதான் ஆட வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்களை கிராபிக்ஸ் முறை மூலம் அதிகப்படுத்தி ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் அந்த பாடலில் ஆடுவது போல உருவாக்கியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை விட இந்த கிராபிக்ஸ் வேலைக்கு தொகை குறைவாகத்தான் ஆனதாக கூறப்படுகிறது. எனவே இன்னும் அதிகமான நபர்களை ஆட வைப்பது என்றால் கூட கிராபிக்ஸ் மூலமாக ஆட வைத்து விடலாம் என்கிற நிலை இருக்கும் பொழுது லியோ திரைப்படத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க தேவையில்லை என்று பேச்சுக்கள் எழுந்து வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top