விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பாலா. அதற்கு பிறகு அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது அதிக வரவேற்பை பெற்று தந்தது.
பொதுவாகவே பலருக்கும் உதவும் குணம் கொண்டவர் பாலா. சென்னையில் வெள்ளம் வந்து மக்கள் பாதிக்கப்பட்டப்போது பல பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி செய்தார் பாலா. இந்த நிலையில் ஒரு விழாவிற்காக சிங்கப்பூர் சென்றப்போது அங்கு நடந்த சம்பவம் ஒன்றை ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது நான் அன்று சிங்கப்பூரில் ஒரு கடையில் அமர்ந்திருந்தேன். அப்போது அந்த கடைக்கு வந்த ஒரு நபர் என்னையே கூர்ந்து கவனித்தார். பிறகு என் அருகில் வந்த அவர் என்னிடம் நீ பாலாதான என கேட்டார்.

நானும் ஆமா சார் நான் பாலாதான் என கூறினேன். இங்கேயே கொஞ்ச நேரம் என கூறிவிட்டு சென்றவர் அவரது குடும்பத்தை அழைத்து வந்து எனக்கு அறிமுகம் செய்தார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டேன்.
பிறகு அவர் கையில் இருந்த ஒரு பெரிய தங்க மோதிரத்தை என் கையில் கொடுத்தார். இதை வைத்து யாருக்காவது உதவி செய் என கூறினார். நான் யாரிடமும் எதுவும் வாங்குவதில்லை சார் என நான் கூறியும் கேட்காமல் அதை கொடுத்துவிட்டு அவர் சென்றுவிட்டார். எனக்கு வியப்பை ஏற்படுத்தும் விஷயமாக அது இருந்தது என்கிறார் பாலா.






