Connect with us

லியோ 2 பார்ட் இருக்கு.. தரமான மாஸான சம்பவம் உறுதி! – லோகேஷ் கனகராஜ்!

News

லியோ 2 பார்ட் இருக்கு.. தரமான மாஸான சம்பவம் உறுதி! – லோகேஷ் கனகராஜ்!

Social Media Bar

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகி தற்போது ரிலீஸுக்கே தயாராகிவிட்டது. இந்த ஒரு வருட காலத்தில் இந்த படம் ட்ரெண்ட் ஆன அளவிற்கு வேறு எந்த படமும் ட்ரெண்ட் ஆகவில்லை. காரணம் லோகேஷ் கனகராஜ். மேலும் தமிழ் சினிமாவின் 1000 கோடி வசூல் செய்த சாதனையை லோகேஷின் படத்தால்தான் செய்ய முடியும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

அது இந்த லியோ படத்தில் நடந்துவிடும் என ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே லோகேஷ் இயக்கிய கைதி, விக்ரம் படங்களின் வெற்றியும் அதன் தொடர்ச்சியும் இரண்டாம் பாகங்கள் எடுப்பதற்கான கதையம்சத்தோடு உள்ளன. இந்நிலையில் லியோவும் 2 பார்ட் வருமா? லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் லியோ வருமா? என பல யூகங்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசியபோது லியோ-2 இருப்பதை தெரியாமல் உளறிவிட்டார். இதன்மூலம் லியோ என்பது ஒரு தொடக்கம்தான் என தெரிய வந்திருக்கிறது. இதனால் லியோவின் க்ளைமேக்ஸ் எப்படி இருக்கும்? இரண்டாம் பாகத்தில் என்ன நடக்கும்? என எதிர்பார்ப்பில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

To Top