Connect with us

தமிழ் பொண்ணா இருந்துக்கிட்டு மேடையில் இதை பண்ணாதீங்க!.. பிரியா ஆனந்துக்கு வார்னிங் கொடுத்த தியாகராஜன்!..

thiyagarajan priya anand

News

தமிழ் பொண்ணா இருந்துக்கிட்டு மேடையில் இதை பண்ணாதீங்க!.. பிரியா ஆனந்துக்கு வார்னிங் கொடுத்த தியாகராஜன்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் “வைகாசி பொறந்தாச்சு” என்னும் படத்தில் தன்னுடைய 17-வது வயதில் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் திரும்பி பார்க்க வைத்த நடிகர் பிரசாந்த்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனரான ராதா பாரதி எழுதி இயக்கி இருந்தார். இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரசாந்திற்கு நல்ல ஒரு தொடக்கத்தை கொடுத்தது.

இவரின் தந்தை பிரபல இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் ஆவார். தந்தை சினிமாவில் நல்ல இடத்தில் இருந்தாலும், அதனை எங்கும் பயன்படுத்திக் கொள்ளாமல் தன்னுடைய நடிப்பின் மூலம் மட்டுமே சினிமாவில் ஜொலித்தவர் பிரசாந்த்.

தற்பொழுது நடித்திருக்கும் அந்தகன் திரைப்படத்தில் அவரின் தந்தை தியாகராஜன் பிரியா ஆனந்தை பற்றி பேசி இருப்பது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தகன் திரைப்படம்

பல வருடங்கள் கழித்து பிரசாந்த் மீண்டும் தமிழ் சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்க இருக்கிறார். குடும்ப பிரச்சினையின் காரணமாக சினிமாவை விட்டு விலகி இருந்த பிரசாந்த், அதன் பிறகு தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் மம்பட்டியான் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் அவருக்கு சரியாக அமையவில்லை.

anthagan

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் தன்னுடைய மகன் பிரசாந்துக்கு மீண்டும் சினிமாவில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என பல முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் பிரசாந்தின் அப்பாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் அந்தகன். இந்த படம் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன்காக பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பிரியா ஆனந்துக்கு வார்னிங் கொடுத்த தியாகராஜன்

இந்நிலையில் அந்தகன் படத்தின் டிரைலர் லான்ச் விழாவில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டார்கள். அப்பொழுது அந்தகன் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தியாகராஜன் இந்த படத்தில் நடிக்கும் பிரியா ஆனந்த் பற்றி கூறியபோது, அந்தகன் படத்தில் பிரியா ஆனந்த் அழகாக நடித்திருக்கிறார். ஆனால் “தமிழ் நடிகையாக இருந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசி வருகிறார்.. இனிமேல் தமிழில் பேசுங்கள்” தமிழ் பட வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் என தியாகராஜன் பிரியா ஆனந்திடம் கூறினார்.

priya anand

மேலும் அந்தகன் படத்தில் யாரை நடிகையாக நடிக்க வைக்கலாம் என எண்ணிய போது பிரியா ஆனந்த் தான் நினைவிற்கு வந்ததாகவும், இந்த படத்தில் அவர் அழகாக நடித்திருக்கிறார் எனவும் கூறி இருக்கிறார்.

To Top