Special Articles
அமெரிக்கா போறப்ப இதை கொண்டு போனா ஜெயில்தான்… சோத்துல போட்டு சாப்புடுறோமே.. ரொம்ப பயமுறுத்துறீங்களேடா?..
ஒரு சிலர் படிப்பு அல்லது வேலை போன்ற காரணங்களால் வெளிநாடு செல்வார்கள். அதிலும் தற்பொழுது இந்தியாவில் இருந்து பெரும்பாலான நபர்கள் மற்ற நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும் சிலர் சுற்றுலா செல்வதற்கும் வெளிநாடு சென்று வருவது வழக்கம். இதுபோன்று இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் போது சில பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
அவ்வாறு இந்தியாவில் இருந்து கொண்டு செல்ல சில பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணங்கள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
அமெரிக்கா செல்லும் போது கொண்டு செல்லக்கூடாத பொருட்கள்
பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் பொழுது நம்முடைய பெட்டிகளை சோதிப்பது வழக்கமான ஒன்றுதான். இவ்வாறு ஒரு நாட்டிலிருந்து நாம் செல்லும் பொழுது அங்கு சில பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. பல சோதனைகளுக்குப் பிறகுதான் ஒரு நாட்டில் இருந்து நாம் மற்றொரு நாட்டிற்கு செல்ல முடியும்.
நம் அனைவருக்கும் தெரிந்தது போதைப் பொருள் போன்ற பொருள்களை நாம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது. அவ்வாறு சோதனையில் போதை பொருட்கள் போன்றவை பிடிப்பட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். அந்த வகையில் சில பொருள்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை. மேலும் ஒரு சில பொருட்கள் நாம் கொண்டு சென்றால் அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஒத்துவராது. அவைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
இந்தியாவிலிருந்து குறிப்பிட்ட சில மருந்துகள் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடல்நிலை சார்ந்த மருந்துகள் டாக்டரின் அனுமதி பெற்று அந்த சீட்டை காண்பித்த பிறகு தான் அந்த மருந்துகள் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். அதிலும் குறிப்பிட்ட சில மருந்துகள் அனுமதிக்கப்படுவதில்லை.
அடுத்ததாக மொபைல் போன். சில குறிப்பிட்ட மொபைல் போன்கள் அமெரிக்காவின் நெட்வொர்க் ஒத்து வராது. அவ்வாறு இருக்கும் பொழுது அங்கு பயன்படுத்தப்படும் சிம் போன்றவற்றை நாம் கொண்டு சென்ற மொபைலில் பயன்படுத்த முடியாமல் போகும்.
இதை மட்டும் கட்டாயம் கொண்டு செல்லாதீர்கள்
கடைசியாக இந்தியாவில் நாம் உணவிற்கு பயன்படுத்தும் கசகசாவை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. இந்தியாவில் உணவிற்கு பயன்படுத்தப்படும் கசகசா ஏன் தடை விதிக்கிறார்கள் என்று பார்த்தால், அதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது.
கசகசா பாப்பி செடிகளில் இருந்து பெறப்படுகிறது. இந்த பாப்பி செடிகளின் விதை முற்றிய பிறகுதான் கசகசா பெறப்படுகிறது. ஆனால் இந்த விதைகள் முற்றுவதற்கு முன்பே அந்த விதைப்பையில் கீறல் இட்டால் அதிலிருந்து ஓபியம் என்ற திரவம் சுரக்கும். இந்த ஓபியம் அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா, புகையிலை போன்ற போதை பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.
எனவே கசகசாவை பயன்படுத்தி இந்த பாப்பி செடிகள் வளர்க்க முடியும் என்பதால் கசகசாவை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
கசகசா விதைகள் மருந்து சோதனைகளில் தவறான நேர்மறையான முடிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் இதுபோன்ற பொருட்களை மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்