Connect with us

கலாநிதி மாறன் தான் ஆரம்பத்தில் இருந்தே காரணம்!.. எதிர்நீச்சல் சீரியலுக்கு எண்டு கார்டு போட இதுதான் காரணம்!..

ethir-neechal-2

News

கலாநிதி மாறன் தான் ஆரம்பத்தில் இருந்தே காரணம்!.. எதிர்நீச்சல் சீரியலுக்கு எண்டு கார்டு போட இதுதான் காரணம்!..

Social Media Bar

சன் டிவியில் ஒளிப்பரப்பான சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியலாகா இருந்து வந்த தொடர் எதிர்நீச்சல். சன் டிவியில் பல காலங்களாகவே இயக்குனராக இருந்து வரும் திருச்செல்வன் இந்த சீரியலை இயக்கி வருகிறார்.

இவர் ஏற்கனவே தமிழில் கோலங்கள் என்னும் சீரியலை இயக்கி அதை ப்ளாக் பஸ்டர் ஹிட்டும் கொடுத்தார். அதற்கு பிறகு அவர் இயக்கி தற்சமயம் பெரும் வரவேற்பை பெற்ற நாடகமாக எதிர்நீச்சல் இருந்து வருகிறது.

வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல்:

பொதுவாக சீரியல்களில் பெண்கள்தான் வில்லிகளாக இருப்பார்கள். ஆனால் எதிர்நீச்சல் சீரியலை பொறுத்தவரை அதில் ஆண்கள்தான் வில்லன்களாக இருந்து வருகின்றனர். ஜனனி என்கிற பெண் ஆதிகுணசேகரன் என்பவரின் வீட்டிற்கு மருமகளாக செல்கிறார்.

அங்கு அவர்கள் அனைத்து பெண்களையும் அடிமைகளை போல நடத்துவதை பார்த்து ஜனனி எடுக்கும் போராட்டத்தை வைத்து கதை செல்கிறது. ஆரம்பத்தில் நடிகர் மாரிமுத்துதான் இதில் ஆதி குணசேகரனாக நடித்தார். ஆனால் அவரது இறப்பிற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என பேச்சுக்கள் போய் கொண்டிருந்தன.

தயாரிப்பாளர் செய்த வேலை:

திருச்செல்வம் ஒரு நபரை தேர்ந்தெடுத்து வைத்திருந்தார். ஆனால் கலாநிதி மாறன் நாடகத்திற்கு வேலராமமூர்த்தி பொருத்தமாக இருப்பார் என கூறி அவரை நடிக்க வைக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து வேலராம மூர்த்தி நடிக்க துவங்கிய பிறகு அனைவருக்கும் அது அதிருப்தியை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த நாடகத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங்கும் குறைய துவங்கியது.

இதனை அடுத்து திருச்செல்வத்திற்கு சன் டிவியிடம் வந்த மெயில் ஒன்று அவரது பொறுமையை சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலை முடித்துக்கொள்ள முடிவு செய்துவிட்டார் திருச்செல்வம்.

Articles

parle g
madampatty rangaraj
To Top