Connect with us

விஜய் சேதுபதியோட சூட்சிமம் தெரியாமதான் வாய்ப்பை இழந்தார் பாபி சிம்ஹா!.. இது வேற நடந்துச்சா!..

vijay sethupathi bobby simha

Cinema History

விஜய் சேதுபதியோட சூட்சிமம் தெரியாமதான் வாய்ப்பை இழந்தார் பாபி சிம்ஹா!.. இது வேற நடந்துச்சா!..

Social Media Bar

Vijay sethupathi and Bobby Simha : தமிழில் சிறப்பான நடிகர்கள் என ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக விஜய் சேதுபதியின் பெயரும் இருக்கும். வெறும் ஆக்‌ஷன் கதாநாயகன் என்கிற வட்டத்தில் மட்டும் சுருங்கிவிடாமல் தொடர்ந்து பல விதமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

தற்சமயம் பாலிவுட் வரை சென்று ஜவான், மேரி கிருஸ்மஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஆனால் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் அறிமுகமான அதே காலக்கட்டத்தில்தான் நடிகர் பாபி சிம்ஹாவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சூதுகவ்வும் திரைப்படம் வந்தப்போதே பாபி சிம்ஹாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிறகு வந்த ஜிகர்தண்டா திரைப்படத்தில் பாபி சிம்ஹாவின் நடிப்பை கண்டு தமிழ் சினிமாவே ஆடி போனது என கூறலாம். அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தினார் பாபி சிம்ஹா.

ஆனாலும் விஜய் சேதுபதி அளவிற்கு பாபி சிம்ஹா பிரபலமாகவில்லை. அது ஏன் என்பது குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது விஜய் சேதுபதி கொஞ்சம் மக்களுக்கு தெரிய துவங்கிய வுடனே மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள சில விஷயங்களை செய்தார்.

பொது இடங்களில் ரசிகர்களை சந்தித்து அவர்களை முத்தமிடுதல். பேட்டிகளில் ஏதாவது அறிவுப்பூர்வமாக பேசுவது என தொடர்ந்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி கொண்டார் விஜய் சேதுபதி. இப்போதும் அதை செய்து வருகிறார். ஆனால் பாபி சிம்ஹா அப்படி எதுவும் செய்யவில்லை.

அதனால்தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகளும் குறைந்தன. சினிமாவில் வாய்ப்புகளை பெற வேண்டும் என்றால் எப்போதும் பிரபலமாக இருக்க வேண்டும். அதை பாபி சிம்ஹா அறிந்திருக்கவில்லை என்று கூறியுள்ளார் செய்யாறு பாலு.

To Top