News
குக் வித் கோமாளியில் இருந்து விலகும் வெங்கடேஷ் பட்!.. என்னப்பா சொல்லுறீங்க!.. இதெல்லாம் ஒரு காரணமா?..
Cook with Comali: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அதில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றொன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியாகும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது எண்டர்டெயின்மெண்டுக்கு பஞ்சம் இல்லாமல் செல்லக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும்.
தமிழிலேயே சமையல் நிகழ்ச்சியில் இவ்வளவு நகைச்சுவை செய்து கொண்டுப்போன ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளிதான் இருந்தது. இதன் முதல் சீசன் வெளியானப்போது அந்தளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அடுத்த சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியது.

அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி துவங்கப்போகிறது என்றாலே எப்போது துவங்கும் என அனைவரும் காத்திருக்க துவங்கிவிட்டனர். குக் வித் கோமாளியின் பெரிய பலம் என்றால் அதில் வரும் கோமாளிகள்தான். கோமாளிகளாக வருபவர்கள் செய்யக்கூடிய நகைச்சுவைகளை வைத்தே அந்த நிகழ்ச்சி பிரபலமடைந்தது.
கோமாளிகள் நகைச்சுவை செய்வது போலவே செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவருமே அதில் நல்ல நகைச்சுவை செய்யக்கூடியவர்களாக இருந்து வந்தனர். இந்த நிலையில் அடுத்து துவங்கவிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் கலந்துக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெங்கடேஷ் பட்டிற்கு வேறு விதமான வேலைகள் எல்லாம் இருப்பதால் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர முடியாது என்பதால் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக யார் செஃப்பாக வர போகிறார்கள் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
