Cinema History
எம்.ஜி.ஆர் தி.மு.க கட்சியை விட்டு நீங்க இதுவும் ஒரு முக்கிய காரணம்!.. இதுவரை தெரியவே இல்லையே…
தமிழ் திரை நடிகர்களில் பலராலும் அதிகமாக விரும்பப்பட்ட ஒரு நடிகராக எம்.ஜி.ஆர் இருந்துள்ளார். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அப்போது பெரும் வெற்றியடைந்துவிடும். அரசியல் மீது அதிக ஆர்வம் கொண்ட எம்.ஜி.ஆர் அண்ணா தலைவராக இருந்த காலக்கட்டத்தில் தி.மு.க கட்சியில் சேர்ந்தார்.
அண்ணாவிற்கு பிறகு கட்சியின் பொறுப்புகள் கலைஞர் மு கருணாநிதிக்கு வந்தது. இந்த சமயத்தில்தான் எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் என்கிற திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். அரசியல்வாதியை விட நடிகருக்குதான் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் என்பதை கலைஞர் அறிந்திருந்தார்.

எனவே அவர் தனது மு.க முத்துவை வைத்து பிள்ளையோ பிள்ளை என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் மு.க முத்து கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் போலவே நடித்திருந்தார். ஜூன் 1972 இல் வெளியான இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இது ஏற்கனவே எம்.ஜி.ஆருக்கு கலைஞரின் மீது கோபத்தை ஏற்படுத்தியிருந்தது என கூறப்படுகிறது. ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கென தனி பாணியை கொண்டிருக்க வேண்டும். ஒரு நடிகரை போல இன்னொரு நடிகர் நடிப்பதை எந்த நடிகரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இதுதான் எம்.ஜி.ஆர் கலைஞரை விட்டு பிரிந்து வருவதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது என ஒரு பேச்சு உண்டு.
