Cinema History
நீங்க நாடகமே நடிக்க வேண்டாம்!.. போருக்கு நிதி திரட்ட சென்ற இடத்தில் தியாகராஜ பாகவதருக்கு நடந்த நிகழ்வு!..
Thiyagaraja bagavathar: எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலக்கட்டத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் தியாகராஜ பாகவதர். தியாகராஜ பாகவதர் எம்.ஜி.ஆரை விடவுமே பிரபலமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நேரடியாக காலடி எடுத்து வைத்தவரல்ல தியாகராஜ பாகவதர். அவர் முதலில் நாடகங்களில்தான் நடித்து வந்தார். அப்போதைய காலக்கட்டங்களில் முதலில் நாடகத்தில் நடித்திர்ந்தால்தான் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலை இருந்தது.
தியாகராஜ பாகவதரை பொறுத்தவரை ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த பாடகரும் கூட, அவர் பாடும் பாடல்களுக்கும் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில்தான் இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் போர் புரிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். எனவே அதற்காக இந்தியாவில் நிதி திரட்ட பல வேலைகள் நடந்தன. அப்படியாக நாடகங்கள் நடத்தி நிதி திரட்டி தர வேண்டும் என்று தியாகராஜ பாகவதருக்கும் கட்டளை இட்டிருந்தனர்.
இதனையடுத்து பவளக்கொடி என்னும் நாடகத்தை சென்னையில் நடத்தினார் தியாகராஜ பாகவதர். அப்போது நாடகத்திற்கு இடையே பாடல் வரும் அல்லவா. அதையும் தியாகராஜ பாகவதரே பாடினார். அந்த பாடலில் மெய் மறந்த மக்கள் நாடகமே நடத்த வேண்டாம் தொடர்ந்து பாடி கொண்டிருங்கள் என்று கூறியுள்ளனர்.
அதனையடுத்து நாடக நிகழ்ச்சி இசை நிகழ்ச்சியாக மாறியுள்ளது. தியாகராஜ பாகவதரின் பாடலுக்கு அவ்வளவு வரவேற்பு அப்போது இருந்துள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்