Latest News
ஹாலிவுட் போலவே தமிழில் எடுக்கப்பட்ட டாப் கௌபாய் திரைப்படங்கள்!..
சினிமாக்களில் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை மையமாக வைத்து படங்கள் வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் மன்னராக, படைத்தளபதியாக, மாவீரனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்கள்.
அந்த வகையில் ஹாலிவுட் படங்களில் பிரபலமாக இருந்த திரைப்படங்கள் என்றால் அது கௌபாய் திரைப்படங்கள். ஹாலிவுட் கௌபாய் படங்களை பார்த்து தமிழ் சினிமாவில் பலரும் கௌபாய் திரைப்படங்களை எடுத்தார்கள்.
வெள்ளைக்காரர்கள் கூட்டமாக மாடுகளை மேய்த்தார்கள். மேலும் அந்த மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக குதிரை மேல் ஏறிக்கொண்டு பாதுகாப்புக்கு ஒரு துப்பாக்கியும், அந்த சூழ்நிலைக்கு ஏற்ப உடையையும் அணிந்து கொண்டு, ஒரு பெரியையின் தொப்பியையும் அணிந்தார்கள். அவர்களைத்தான் கெளபாய் என்று கூறினார்கள்.
கௌபாய் என்ற ஒரு கதாபாத்திரத்தை படங்களில் வைத்து, கையில் துப்பாக்கியுடன் அங்கும் இங்கும் துறு துறு என ஓடிக்கொண்டு துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகளில் நடித்து வந்த பெரும்பாலான நடிகர்களை நாம் பார்த்து வந்திருப்போம்.
இந்த கதாபாத்திரங்கள் மக்களுக்கு பிடித்து போக கௌபாய் திரைப்படங்கள் மீதான ஈர்ப்பு மக்களுக்கு இருந்தது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த கௌபாய் திரைப்படங்களைப் பற்றி நாம் பார்க்கலாம்.
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் 2010
இந்தத் திரைப்படம் நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராகவா லாரன்ஸ், சந்தியா, லட்சுமி ராய், பத்மப்ரியா, மனோரம்மா போன்றவர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை சிம்புதேவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதை மாடுபிடி வீரர்களின் தாயகமாக ஜெய்சங்கராபுரம் நகரம் விளங்குகிறது. அந்த நகரத்தை ஒற்றைக்கண் என்ற ஒருவனால் ஆளப்படுகிறது.
அவன் மிகவும் கொடியவன். இந்நிலையில் அந்த கிராமவாசிகளால் காணாமல் போன மார்ஷல் என்ற சிங்கம், தற்போது சிங்காரமாக இருக்கும் ஒருவரின் அடையாளங்களுடன் ஒத்துப் போவதை அந்த கிராம மக்கள் பார்க்கிறார்கள். இதனால் சிங்காரத்தை தூக்கிடாமல் அவரை காப்பாற்றுகிறார்கள். சிங்கம் போன்று இருக்கும் சிங்காரம் அந்த கிராமத்திற்கு பல மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்கிறார். இதனை அறிந்த அந்த கொடுங்கோலன் என்ன செய்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
தாய் மீது சத்தியம் 1978
இந்தத் திரைப்படம் ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்து ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் கதை ரஜினி இதில் பாபுவாக நடிக்கிறார். பாபுவின் பெற்றோர்களை பாலுவும், ஜானியும் கொலை செய்கிறார்கள். இதனால் அவர்களை நிச்சயம் பழிவாங்குவேன் என்று பாபு தன் தாயின் மீது சத்தியம் செய்கிறான். பாபு உள்ளூர் ஜமீன்தாரின் கீழ் பயிற்சி பெறுகிறார்.
மேலும் அந்த ஜமீன்தார் இயற்கையாகவே துப்பாக்கிச் சுடும் திறமை கொண்டிருந்தார். இதனால் ஒரு கெளபாய் போல தன்னை அலங்கரித்துக் கொண்டு ஜமீன்தாரின் துப்பாக்கிகள் மற்றும் குதிரையுடன் அந்த குற்றவாளிகளை கொன்று தன் தாய் மீது செய்த சத்தியத்தை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை.
காலம் வெல்லும் 1970
1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை எம் கர்ணன் இயக்கியிருந்தார். ஜெய்சங்கர் மற்றும் விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தார்கள். ஏழை விவசாய வேலு, கெட்ட எண்ணம் கொண்ட நிலக்கிழார் பெரிய ராஜாவின் அட்டூழியத்தால் தன்னுடைய சகோதரியான தனத்தை இழக்கிறார். தன் சகோதரியின் மரணத்திற்கு பழிவாங்க வேலு பெரிய ராஜாவின் அண்ணன் சின்ன ராஜாவை கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பித்து நரசிங்கம் தலைமையிலான கொள்ளை கும்பலுடன் இணைகிறார்.
வேலு அதன் பிறகு அந்தக் கொள்ளை கும்பலின் தலைவன் ஆகிறான். பணக்காரர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளை காப்பாற்றுவதும், பெரிய ராஜாவை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்து இருப்பதும். மேலும் வேலு தன்னுடைய கிராமத்தில் மனைவி காத்திருப்பதை மறந்து, கடைசியாக பெரிய ராஜாவை பழி வாங்கினாரா என்பதுதான் இந்த படத்தின் கதை.
பதிலுக்கு பதில் 1972
இந்த திரைப்படத்தை ஜம்பு இயக்கி இருந்தார். ஏவிஎம் ராஜன், விஜயகுமாரி நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் முத்து மற்றும் குமரன் என்ற இரண்டு நெருங்கிய நண்பர்கள் கஸ்தூரியை காதலிக்கிறார்கள். ஆனால் குமரன் சிறைக்குச் சென்ற பிறகு மோசமான செல்வாக்கிற்கு ஆளான முத்து, குமரனின் கொள்ளைகளை அனுபவித்து, கஸ்தூரியை துன்புறுத்துகிறான்.
கங்கா 1972
கங்கா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இது எம். என். கர்ணனால் இயக்கப்பட்டு ஜெய்சங்கர் மற்றும் ராஜ கோகிலா நடித்திருந்தார்கள். கதிர்வேலு என்ற சீர்திருத்த கொள்ளையன் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறான். அவன் தனது மகன் கங்காவை ஒரு துணிச்சலான போர் வீரனாக வளர்க்கிறார். ஆனால் கங்கா பெண்கள் மற்றும் குடிப்பழக்கத்தின் மீது நாட்டம் கொண்டவனாக வளர்ந்து வருகிறார். கதிர்வேலு ஒரு நாள் குடிபோதையில் தனது மகனை பார்க்கிறான். ஆத்திரமடைந்தவன் வீட்டை விட்டு கங்காவை வெளியேற்றுகிறார்.
கதிர்வேலு தன்னுடைய மனைவியின் முன்னால் கொலை செய்யப்படுகிறார். இதனால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கங்கா தன் தந்தையின் இறுதி சடங்குகளை செய்ய வருகிறான். அவனது தந்தையை கொன்ற நான்கு பேரையும் பழிவாங்கும் வரை தன் முகத்தை பார்க்க கூடாது என அவனுடைய தாய் சபதம் எடுக்கிறாள்.