Connect with us

பிக்பாஸில் அர்ச்சனாவிற்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு!.. கோடி கணக்குல வருதா!.. இதுதான் காரணம்!..

biggboss archana

Bigg Boss Tamil

பிக்பாஸில் அர்ச்சனாவிற்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு!.. கோடி கணக்குல வருதா!.. இதுதான் காரணம்!..

Social Media Bar

Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு ரவுண்டு மூலமாக வந்திருந்தாலும் கூட தொடர்ந்து மக்கள் மத்தியில் உடனே ஒரு சிறப்பான இடத்தை பிடித்தவர் அர்ச்சனா. அர்ச்சனாவிற்கு அடுத்த இரண்டு வாரங்களிலேயே சிறப்பான ரசிக பட்டாளம் உருவாகிவிட்டது.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் சீசனில் டைட்டிலை பெற்றுள்ளார் அர்ச்சனா. இதில் டைட்டில் ஜெயிப்பவர்களுக்கு பிக்பாஸ் சார்பாக 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். ஆனால் அது மட்டுமின்றி இன்னமும் நிறைய ஜெயித்துள்ளார் அர்ச்சனா.

அர்ச்சனாவிற்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் மூலமாக ப்ளாட் ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 5 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு விளம்பர பங்குதாரரான மாருதி நிறுவனம் ஒரு காரை பரிசாக வழங்கியுள்ளது.

மாருதி கிராண்ட் விட்டாரா (Maruthi Grand Vitara)எனும் காரை பரிசாக கொடுத்துள்ளது. இந்த காரின் மதிப்பு கிட்டத்தட்ட 20 லட்சம் என கூறப்படுகிறது. இவை எல்லாம் சேர்த்தால் மொத்தமாக 75 லட்ச ரூபாய் மதிப்பு வருகிறது.

இவை இல்லாமல் அர்ச்சனாவிற்கு தினசரி சம்பளம் என ஒன்று உள்ளதல்லவா. தினசரி அர்ச்சனாவிற்கு வழங்கப்பட்ட சம்பளம் மட்டும் 22,000 ரூபாய். மொத்தம் 104 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் 28 நாட்கள் கழித்துதான் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். எனவே 76 நாட்களுக்கு மொத்தமாக 16,72,000 ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்,

எனவே மொத்தமாக 91 லட்சத்து 72,000 ரூபாயை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக அர்ச்சனா பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 1 கோடிக்கு 8 லட்சங்கள் குறைவு. இதுவரை நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவ்வளவு பெரிய தொகை வென்றவருக்கு கிடைத்ததா என்பது சந்தேகமே என கூறப்படுகிறது.

To Top