Special Articles
மலையாளத்தில் ஒரு வித்தியாசமான நடிகர்.. டொவினோ தாமஸின் தமிழ் டப்பிங் படங்கள்..!
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, மணிகண்டன் மாதிரியான நடிகர்கள் எல்லாம் எப்படி வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு நடிக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பர் நடிகர் டொவினோ தாமஸ்.
பெரும்பாலும் டொவினோ தாமஸ் நடிக்கும் திரைப்படங்களின் கதைகளங்கள் என்பது மாறுப்பட்டதாக இருக்கும். அந்த வகையில் வந்த சில திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.
மாரி 2:
டொவினோ தாமஸ் வில்லனாக நடித்து தமிழில் வந்த திரைப்படம் மாரி 2. இந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் டொவினோ தாமஸ்.
ஆனாலும் அதற்கு பிறகும் தமிழில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
மின்னல் முரளி:
மின்னல் முரளி ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். மலையாளத்தில் பிரபல நடிகரான பாசில் ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு கிராமத்தில் இடி இடித்த காரணத்தினால் குரு சோமசுந்தரம் மற்றும் டொவினோ தாமஸ் ஆகிய இருவருக்கும் சக்திகள் கிடைக்கிறது.
குரு சோமசுந்தரம் அந்த சக்திகளை தவறான வழிகளில் பயன்படுத்துகிறார். ஆனால் டொவினோ தாமஸ் அதை நல்ல விதத்தில் பயன்படுத்துகிறார். இப்படியாக அந்த கிராமத்தின் சூப்பர் ஹீரோவாக மின்னல் முரளி என்கிற பெயரில் உருவாகிறார் டொவினோ.
அவர் வில்லனை எப்படி அழிக்க போகிறார் என்பதே கதை..
தள்ளுமாலா:
தள்ளுமாலா ஒரு எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாகும். படத்தில் பெரிதாக கதைக்களம் என எதுவும் கிடையாது. ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருக்கும் ஒரு இளைஞன். எதற்கெடுத்தாலும் அவன் சண்டைக்கு சென்றுவிடுவான். இந்த நிலையில் ஒரு பெண்ணை அவன் காதலிக்கிறான். அதை வைத்து படத்தின் கதை செல்கிறது.
ஏ.ஆர்.எம்
ஏ.ஆர்.எம் ஒரு சுவாரஸ்யமான கதைகளத்தை கொண்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் வருகிறார் டொவினோ தாமஸ். முதல் தலைமுறையில் களரி வீரனாக குஞ்சிகேலு நாயனார் என்கிற கதாபாத்திரம் வருகிறது.
இந்த வீரன் ஒரு பெரிய அரசனின் மகனை காப்பாற்றுகிறான். அதற்கு ஈடாக விண்வெளியில் இருந்து எடுத்த கல்லினால் செய்யப்பட்ட அதிசய விளக்கை கேட்கிறான்.
அது இவனது கிராமத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் அவனது வம்சத்தில் வரும் மணியன் என்னும் திருடன் கதாபாத்திரத்திலும் டொவினோவே நடித்துள்ளார்.
மணியன் கிராமத்தின் ஆக சிறந்த திருடனாக இருக்கிறான். இவன் அந்த கிராமத்தில் இருக்கும் சிறப்பு விளக்கு சிலையை திருட பார்க்கிறான். அவனது பேரனாக அடுத்து அஜயன் வருகிறான்.
அஜயன் தன் தாத்தாவால் தனது தலைமுறைக்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைப்பதற்காக அந்த சிறப்பு விளக்கு சிலையை தேடி செல்கிறான். அந்த விளக்கின் சக்திகள் மற்றும் அதனுள் இருக்கும் புதிர்களை அடிப்படையாக கொண்டு கதை செல்கிறது.
2018
மலையாள சினிமாவில் அதிக வசூல் கொடுத்த திரைப்படங்களில் 2018 முக்கிய திரைப்படமாகும். 26 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 177 கோடி வசூல் செய்தது. 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியது.
அப்போது பக்கத்து மாநிலங்கள் எல்லாம் கேரளாவுக்கு உதவி செய்தன. இந்த நிலையில் கேரளாவில் உள்ள அருவிக்குளம் என்னும் கிராமத்தில் நடக்கும் கதைதான் 2018 திரைப்படத்தின் கதை.
அனூப் என்கிற இளைஞன் இராணுவத்தில் பணிப்புரிந்துவிட்டு ஊருக்கு வருகிறான். அப்போது ஊருக்குள் வெள்ள பேரிடர் ஏற்படுகிறது. இந்நிலையில் அனூப் ஒரு சிறிய தெப்பத்தை உருவாக்கி அந்த கிராம மக்களை காப்பாற்றுகிறான்.
அதை வைத்து படத்தின் கதை செல்கிறது.
இவை எல்லாம் டொவினோ தாமஸின் நடிப்பில் நல்ல கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களாக இருக்கின்றன.
