Tech News
சிம் பயன்பாட்டில் புது கட்டுபாடு.. எஸ்.எம்.எஸ் மற்றும் கால்களுக்கு லிமிட் செய்த அரசு..!
சிம் நிறுவனங்கள் இந்தியாவில் தொடர்ந்து ரீச்சார்ச் விலைகளை மாற்றி அமைத்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இவற்றின் திட்டங்கள் அனைத்துமே ட்ராய் எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு கீழ்தான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் பயனாளர்களுக்கு உதவும் வகையில் தொடர்ந்து ட்ராய் விதிமுறைகளை வகுத்து வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் துவங்கியது முதலே அதிரடி விதிமுறைகளை விதித்து வருகிறது ட்ராய். அந்த வகையில் ஜனவரியிலேயே ட்ராய் இணையம் இல்லாத கால் வசதி மட்டும் கொண்ட டாரிஃப் ப்ளான்களை கொண்டு வர வேண்டும் என பகீரங்கமாக அறிவித்தது.
அதன்படி அனைத்து சிம் நிறுவனங்களும் கால் பேசுவதற்கு மட்டும் உரிய ப்ளானை அறிவித்தது. இந்த நிலையில் அடுத்ததாக ப்ரோமோஷன் கால்களுக்கு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது ட்ராய். அதன்படி ப்ரோமோஷன் கால்கள் மற்றும் எஸ்.எம்.எஸ்களுக்கு நிறுவனங்கள் இனி பத்து இலக்க மொபைல் எண்களை பயன்படுத்த முடியாது.
10க்கும் குறைவான இலக்கங்களை கொண்ட எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ப்ரோமோஷன் மற்றும் விளம்பர கால்களை பயனர்கள் எளிதாக அடையாளம் காண முடியும். அப்படியான கால்களை அவர்கள் எளிதாக தவிர்க்கவும் முடியும்.
இந்த நிலையில் ட்ராயின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்புகள் ஏற்பட்டு வருகின்றன.
