Tamil Cinema News
சூர்யா படத்தில் களம் இறங்கும் டி.டி.எஃப் வாசன்.! இது என்ன புது காம்போ..!
கங்குவா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார். ஏனெனில் ஏற்கனவே சூர்யாவிற்கும் மார்க்கெட் குறைந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்.
விஜய் அஜித் மாதிரி சூர்யா பல கோடிகளுக்கு ஓடி வெற்றி கொடுக்கும் படங்களை கொடுத்து வெகு வருடங்கள் ஆகிறது. சிங்கம் 3 திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லும் படி பெரிய வெற்றி படங்கள் எதுவும் சூர்யாவிற்கும் அமையவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்து சூர்யா நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் எந்த ஒரு திரைப்படமும் தோல்வியை கண்டது கிடையாது.
சூர்யா படத்தில் டி.டி.எஃப்:
அந்த திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றன. மேலும் நகைச்சுவை காட்சிகளை கையாள்வதில் ஆர்.ஜே பாலாஜிக்கு அதிக திறமை இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் டி.டி.எஃப் வாசன் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் மத்தியில் டி.டி எஃப் வாசனுக்கு வரவேற்பு இருப்பதால் அவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கலாம் என்று ஆர்.ஜே பாலாஜி முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.