சொல்லியும் கேட்காம வில்லங்கமா அதை பண்ணுனான்.. அன்னிக்கே முடிவு பண்ணுனேன்.. டி.டி.எஃப் ஆல் ஆடிப்போன இயக்குனர்..!

சமூக வலைதளங்கள் மூலமாக பிரபலமடைந்த டிடிஎஃப் வாசன் அடுத்து திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்தது.

இதனை தொடர்ந்து மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட டி.டி.எஃப் வாசன் வெகுவிரைவில் எனது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடரும் என்று கூறியிருந்தார்.

ஆனால் அவர் கூறி சில மாதங்கள் ஆன பிறகு கூட இன்னமும் படத்திற்கான படப்பிடிப்பு என்பது துவங்காமலே இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென்று இந்த படத்த்தின் இயக்குனர் செல் அம் படத்தில் இருந்து டி.டி.எஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கவில்லை.

ttf vasan

Social Media Bar

டி.டி.எஃப் வாசன் நீக்கம்:

படத்தின் கதாநாயகனை மாற்றி விட்டோம் என்று கூறினார். சில நாட்களில் கூல் சுரேஷை அறிமுகப்படுத்தி இவர்தான் இந்த படத்தின் கதாநாயகன் என்றும் கூறினார். இந்த நிலையில் இதனால் கோபமடைந்த டி.டி.எஃப் வாசன் அந்த இயக்குனர் குறித்து பலவாறு வீடியோக்களை போட்டு வந்தார்.

இதற்கு நடுவே பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் கூறும் பொழுது ஒருநாள் திருப்பதியில் எடுக்கப்பட்ட வீடியோவை கொண்டு வந்து எடிட் செய்து கொண்டிருந்தான் டி.டி.எஃப் வாசன் அதனை பார்த்த நான் அதை எடிட் செய்து போடாதே அது உனக்கு பிரச்சனையாகும் என்று கூறினேன்.

இருந்தாலும் பரவாயில்லை வியூவ்ஸ் கிடைக்கும் என்று கூறி அவன் அதை போட்டான் அப்பொழுதே முடிவு செய்துவிட்டேன் அவனை படத்தில் வைக்க கூடாது என்று என அந்த விஷயத்தை விளக்கி இருக்கிறார் இயக்குனர் செல் அம்.