News
ஒரு வழியா பாதி டிஸ்ட்ரிபூஷனை வாங்கியாச்சு! – தளபதியுடன் மல்லுக்கட்டும் உதயநிதி!
வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாவதற்காக தயாராகி வரும் தல தளபதி படங்கள்தான்வ் துணிவு மற்றும் வாரிசு.

இரண்டு படங்களுமே கொஞ்சம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள். எனவே இரண்டு படங்களுக்குமே மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. அதேசமயம் படத்தை வெளியிடுவதிலும் கூட இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.
துணிவு படத்தை வெளியிடுவதற்கு உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வாங்கியிருந்தது. அதே போல வாரிசு படத்தை 777 ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால் வாரிசு படமும் நல்ல வசூல் கொடுக்கும் என்பதால் அந்த படத்தையும் கூட வாங்கி விட வேண்டும் என முயற்சித்து வந்தது ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ்.
இந்த நிலையில் முழுதாக அனைத்து பகுதிகளுக்கு டிஸ்ட்ரிபூஷன் வாங்க முடியவில்லை என்றாலும் கூட சென்னை, செங்கல்ப்பட்டு, நார்த் ஆர்காட், செளத் ஆர்காட் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளுக்கான டிஸ்ட்ரிபூஷனை ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
சென்னை போன்ற பெரிய நகரின் டிஸ்ட்ரிபூஷனை பெற்றுள்ளதால் ரெட் ஜெயண்டிற்கு நல்ல லாபம் வருவதற்கு வாய்ப்புள்ளது.
