69 வயதில் செய்யுற வேலையா இது.. ரசிகைக்கு லிப்லாக்.. நிகழ்ச்சியை அலறவிட்ட பிரபல பாடகர்.!

தமிழில் பிரபலமான பாடகர்களில் பாடகர் உதித் நாராயன் மிக முக்கியமானவர். வெகு காலங்களாகவே தமிழில் இவர் நிறைய பாடல்களை பாடியுள்ளார். தமிழில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே பிரபலமான பாடகராக இவர் இருந்து வருகிறார்.

பெரும்பாலும் தமிழில் இவர் பாடும் பாடல்கள் அதிக வெற்றியை கொடுக்கின்றன. முக்கியமாக மெலோடி பாடல்களை பாடுவதில் மிக பிரபலமானவர் உதித் நாராயன். தமிழ் தெரியாமல் பாடும் இவரது உச்சரிப்புக்கு ஒரு தனி ரசிக பட்டாளம் இருந்து வருகிறது.

வாம்ம துறையம்மா, இத்துண்டு முத்தத்திலே இஷ்டம் இருக்கா, கொக்கர கொக்கரக்கோ, எந்தன் உயிர் தோழி மாதிரியான பல பாடல்கள் அவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்று தந்துள்ளன.

Social Media Bar

ஆனால் ஏ.ஆர் ரகுமானுக்கு அடுத்து வந்த இசையமைப்பாளர்கள் தமிழில் பெரிதாக உதித் நாராயணனை பயன்படுத்தவில்லை. அனிரூத், ஹாரிஸ் ஜெயராஜ், ஹிப் ஹாப் ஆதி, ஜிவி பிரகாஷ் மாதிரியான இயக்குனர்கள் எல்லாம் உதித் நாராயணனுக்கு பெரிதாக வாய்ப்புகள் வழங்கியது கிடையாது.

அதனால் இப்போது தமிழில் இவர் இப்போது பெரிதாக பாடல்கள் பாடுவது கிடையாது. இந்த நிலையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி அதில் பாடி வருகிறார் உதித் நாராயன். இந்த நிலையில் சமீபத்தில் அப்படியாக நிகழ்ச்சி நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் ரசிகையான இளம்பெண் ஒருவர் உதித் நாராயணனுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டார். அப்படி செல்ஃபி எடுக்கும்போது அவர் உதித் நாராயணனின் கன்னத்தில் முத்தமிட்டார். உடனே திரும்பிய உதித் நாராயன் அந்த பெண்ணுக்கு உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டார்.

இப்போது உதித் நாராயணனுக்கு 69 வயதாகிறது. இந்த வயதில் ஒரு இளம்பெண் உதட்டில் முத்தம் கொடுக்கலாமா என இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.