Connect with us

சூர்யாவோட இன்னொரு படம் இருக்கு.. அதான் கடைசி படம்.. லோகேஷ் கொடுத்த அப்டேட்..!

lokesh kanagaraj

Tamil Cinema News

சூர்யாவோட இன்னொரு படம் இருக்கு.. அதான் கடைசி படம்.. லோகேஷ் கொடுத்த அப்டேட்..!

Social Media Bar

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் சம்பளம் என்பதும் அதிகரித்து வருகிறது.

10 படங்கள் கூட இன்னும் இயக்கவில்லை என்றாலும் கூட 50 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்கும் ஒரு இயக்குனராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவிலேயே இப்படி ஒரு இயக்குனர் உடனடியாக அதிக வளர்ச்சியை அடைந்தது இதுவே முதல்முறை என்று கூறலாம்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப் போகும் திரைப்படங்கள் குறித்த அப்டேட்டை சமீபத்தில் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.

lokesh

அதாவது கைதி படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து அடுத்து இயக்க வேண்டி இருக்கிறது. அது இல்லாமல் ரோலக்ஸ் திரைப்படத்தையும் இயக்க வேண்டி இருக்கிறது.

விக்ரம் 2 திரைப்படத்தை பொறுத்தவரை அந்த திரைப்படம்தான் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் திரைப்படங்களில் கடைசி படமாக இருக்கும். அந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்கிற திரைப்படம் இயக்குவதற்கு முன்பே திட்டமிட்ட இடமும் அந்த திரைப்படத்தை இயக்க உள்ளேன் என்று புதிய தகவலை கொடுத்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இரும்பு கை மாயாவி திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் என்றும் கூறப்படுகிறது.

To Top