Connect with us

ராமதாஸ் கதையை படமாக்குனா லைகா நிலைமை கேள்விக்குறிதான்.. போட்டு உடைத்த பத்திரிக்கையாளர்!. இப்படி ஒரு காரணம் இருக்கா?.

lyca

News

ராமதாஸ் கதையை படமாக்குனா லைகா நிலைமை கேள்விக்குறிதான்.. போட்டு உடைத்த பத்திரிக்கையாளர்!. இப்படி ஒரு காரணம் இருக்கா?.

Social Media Bar

lyca: தற்பொழுது சினிமாவில் பல சுவாரசியமான கதைகள் படமாக்கப்பட்டு வரும் வேலையில் வரலாற்றில் நடந்த உண்மை சம்பவங்கள், மன்னர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பிரபல அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்ற பல தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாகப்பட்டு வருவது இயல்பான ஒன்று தான்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பிரபல கட்சித் தலைவரின் பயோபிக் ஒன்றை படமாக்க பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாராக இருந்த நிலையில், தற்பொழுது அதிலிருந்து விலகி விட்டதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார். யார் அந்த தலைவர்? எதற்காக அந்த தயாரிப்பு நிறுவனம் விலகியது? என்பதை பற்றி இதில் காண்போம்.

பாமக தலைவர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், அரசியல்வாதியுமான ராமதாஸ் வன்னியர் சங்கத்தில் அங்கம் வகித்தவர். இவர் 1980ல் வன்னியர் சமூகத்தின் நலனுக்காக வன்னியர் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கினார். அந்த சங்கம் தான் 1990-இல் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது

இவ்வாறு கட்சியின் தலைவராக ராமதாஸின் பயோபிக்கை படமாக போவதாகவும் இந்த படத்தை இயக்குனர் சேரன் இயக்க, பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்க இருந்ததாக தகவல் வெளிவந்தது. ஆனால் தற்பொழுது அது கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.

ராமதாஸ் பயோபிக் கில் இருந்து பின்வாங்கிய லைகா

இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பேசும் போது, முதலாவதாக இந்த படத்தை சேரன் இயக்க, சரத்குமார் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அப்பொழுது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் ரீதியாக இருவரும் வேறு வேறு கட்சியை சேர்ந்தவர்கள். ஆனால் சரத்குமாரும், சேரனும் நண்பர்கள் என்பதால் சேரன் சம்மதிக்க வைத்திருக்கலாம் என பேசப்பட்டு வந்தது.

அதன் பிறகு சரத்குமார் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார் என்ற தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தற்பொழுது பிரகாஷ்ராஜ் நடிப்பார் என தகவல் வெளிவந்தது. ஆனால் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவில்லை எனவும் தமிழ் குமரன் இந்த படத்தை தயாரிக்க உள்ளார் எனவும் பிஸ்மி கூறியுள்ளார்.

S. Ramadoss

தமிழ் குமரன் பாமக கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜி.கே மணியின் மகன் ஆவார். அன்புமணி ராமதாஸ் பாமக கட்சியின் தலைவராக ஆன பிறகு அவர் வகித்த இளைஞர் அணி பதவியை ஜி.கே மணியின் மகன் தமிழ் மணிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் லைகா விலகியதற்கு மற்றொரு காரணமாக பத்திரக்கையாளர் கூறுவது, தற்பொழுது அரசியல் ரீதியாக திமுக கட்சியின் மீது பல விமர்சனங்களை அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார். எனவே ரெட் ஜெயண்ட் ஆதரவில் இருக்கும் லைகா நிறுவனம் தற்பொழுது ராமதாஸ் பயோபிக்கை தயாரித்தால் அது லைக்காவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் இவரின் பயோபிக் தயாரிப்பிலிருந்து லைகா நிறுவனம் விலகியதாக பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top