Cinema History
எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்றதுக்காக நான் வைத்த பாடல்!.. வாலி சொன்ன சீக்ரெட்!..
vaali compose song: கண்ணதாசனுக்கு பிறகு திரைத் துறையில் பிரபலமான ஒரு பாடல் ஆசிரியர் என்றால் அது கவிஞர் வாலிதான். வாலி எழுதிய பழைய பாடல்கள் பெரும் வெற்றியை கொடுத்துள்ளன.
முக்கியமாக எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான நண்பராக இருந்தார். தொடர்ந்து வாலி தன்னுடைய படங்களுக்கு பாடல் வரிகளை எழுத வேண்டும் என்று எம்ஜிஆர் ஆசைப்பட்டார். அதனை தொடர்ந்து நிறைய எம்ஜிஆர் பாடல்களுக்கு வாலி பாடல் வரிகளை எழுதி கொடுத்துள்ளார்.
சிவாஜி கணேசனை விடவும் எம்.ஜி.ஆருக்குதான் இவர் அதிகமாக பாடல்கள் எழுதி கொடுத்துள்ளார். எனவே அப்போதைய காலகட்டத்தில் வாலிக்கு அதிகமாக வாய்ப்பு கிடைக்க ஒரு வகையில் எம்.ஜி.ஆர் உதவியிருந்தார் அந்த உதவிக்கு நன்றி செலுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார் வாலி.

இந்த நிலையில் வழக்கும் போல ஒரு எம்ஜிஆர் படத்தில் பாடல் வரிகள் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அரச கட்டளை என்னும் படத்தில் ஜெயலலிதா அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது எம்ஜிஆர் குறித்து பாடுவது போன்ற பாட்டு ஒன்று இருக்கும்.
அதன் பாடல் வரிகளை வாலி எழுதும்பொழுது என்னை பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் என்று எம்ஜிஆரை குறிப்பிட்டு எம்ஜிஆருக்கு நன்றி கூறும் வகையில் அந்த பாடல் வரிகளை எழுதி இருந்தார் இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
