Connect with us

கொடுத்த பில்டப்புக்கு ஓ.கேவா இருக்கா.. வாழை பட விமர்சனம்…

vaalai

Latest News

கொடுத்த பில்டப்புக்கு ஓ.கேவா இருக்கா.. வாழை பட விமர்சனம்…

Vaazhai Movie Review: தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை மையமாகக் கொண்டு படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் காலங்காலமாக சமுதாயத்தில் நடக்கும் சில பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாகவும் பல இயக்குனர்கள் படங்களை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவ்வாறு எடுக்கும் படங்கள் சர்ச்சைக்கு உள்ளாகப்படுவது வழக்கம் தான். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

தற்போது இவரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் வாழை. தான் எடுத்த முந்தைய திரைப்படங்களில் சமுதாயத்தில் நடக்கும் சாதிய கொள்கைகளை குறித்து படமாக எடுத்திருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது எடுத்திருக்கும் வாழை திரைப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் விமர்சனம் பற்றி காணலாம்.

வாழை திரைப்படம்

மாரி செல்வராஜின் முதல் படமாக வெளிவர வேண்டிய படம் வாழை என கூறினார். காரணம் இது அவருடைய வாழ்க்கையின் வலிகளை சொன்ன திரைப்படம் ஆகும். அவருடைய சிறு வயதில் நடந்த சம்பவங்களை படமாக எடுத்துள்ளார் என்பதும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் இந்த திரைப்படம் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவன் வாழை தார் வெட்டுவதும், அதை சுமந்து கொண்டு செல்வதும், மேலும் பள்ளி செல்லும் போது ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு பற்றியும் கூறுகிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படம் போலவே திருநெல்வேலியை மையமாக வைத்து இந்த படமும் எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் விமர்சனம்

இந்த படத்தில் கதாநாயகனாக பள்ளி செல்லும் சிறுவனாக சிவனணைந்தன், அவனின் நண்பன் சேகரும் வாழைத்தார் சுமக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால் வாழைத்தார் சுமக்கும் பணிக்கு சிவனணைந்தனுக்கு செல்ல விருப்பமில்லை. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் அந்த வேலையை செய்து வருகிறான். ஒரு நாள் வாழைத்தார் சுமக்கும் பணிக்குச் செல்லாமல் அவன் பள்ளிக்கூடம் செல்வதும் அன்று அந்த கிராமத்தில் நடந்த சோகமான நிகழ்வை பற்றியும் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.

இந்நிலையில் சிவனணைந்தான் கதாபாத்திரம் மாரி செல்வராஜின் இளம் வயது கதாபாத்திரமாகும். அவர் வாழை திரைப்படத்தில் ரஜினிகாந்த், விஜயின் ரசிகராக வருகிறார். மேலும் அவரின் நண்பர் சேகர் கமலின் ரசிகராக இருக்கிறார். இருவரும் சண்டையிட்டுக் கொண்டாலும் நட்புடன் இருந்து வருகிறார்கள். இவர்களின் நடிப்பு நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பது சந்தேகம் இல்லை.

vaazhai

இந்நிலையில் பள்ளி ஆசிரியராக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நிகிலா விமல் நடித்திருக்கிறார். அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டும் படியாக இருக்கிறது. இந்த டீச்சரை சிவனணைந்ததுக்கு பிடிக்க படம் இருவருக்கும் உள்ள காட்சிகளை அழகாக காட்டியுள்ளது.

மேலும் இந்த படத்தில் கலையரசன் இளைஞராக நடித்திருக்கிறார். இவர் கூலி கேட்டு போராடும் இளைஞனாகவும் நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் கனி என்னும் கதாபாத்திரத்தை ஏற்று கலையரசன் படம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும் அவரின் நடிப்பு நன்றாக உள்ளது.

மேலும் இந்த படத்தில் சிவனணைந்தன் அக்காவாக வேம்பு எனும் கதாபாத்திரத்தில் திவ்யா துரைசாமி நடித்திருக்கிறார். மேலும் வேம்பிற்கும் கனிவிற்கும் உள்ள காதலை இந்த படம் கூறுகிறது.

படத்தின் முதல் பகுதி சிரிப்பு, நகைச்சுவை, காதல் என நகர்ந்து கொண்டாலும் படத்தின் இரண்டாம் பகுதி படத்திற்கு பெரும்பலமாக அமைந்திருக்கிறது. வாழைத்தார் சுமக்காமல் பள்ளி செல்லும் சிவனணைந்தன் எதிர்கொள்ளும் சிக்கலும், அந்த சமயத்தில் கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவமும் கிளைமாக்ஸ்யில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவமாக இருக்கிறது. இந்த கிளைமாக்ஸ் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் கண்ணீருடன் வெளி வருவார்கள் என்பது சந்தேகம் இல்லை.

மேலும் படத்தில் குறிப்பிட்டு கூறும் படியான எதிர்மறை என்னவென்றால், படத்தில் அடுத்ததாக நடக்க இருக்கும் சம்பவங்கள் நமக்கு முன்கூட்டியே கணிக்கும்படியாக இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு சில சம்பவங்களில் முதலாளித்துவ அரசியல் தான் காரணம் என்பதை சற்று திணிப்பது போல அமைகிறது. மற்றபடி படத்தில் பாடல்கள் அனைவருக்கும் ரசிக்கும் படியாக உள்ளது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

divya duraisamy 3
dhanush meena
sasikumar
ttf vasan zoya
To Top