Connect with us

Vairamuthu : எல்லாம் முடிக்கு தகுந்த அளவுக்குதான் ஐயா!.. கருணாநிதியையே கலாய்த்துவிட்ட வைரமுத்து!..

vairamuthu karunanithi

Cinema History

Vairamuthu : எல்லாம் முடிக்கு தகுந்த அளவுக்குதான் ஐயா!.. கருணாநிதியையே கலாய்த்துவிட்ட வைரமுத்து!..

Social Media Bar

Poet Vairamuthu : தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசன் வாலிக்கு பிறகு ஒரு சிறப்பான கவிஞர் என்றால் அது வைரமுத்துதான் வைரமுத்து எழுதிய பல பாடல் வரிகள் இப்போது மக்கள் மத்தியில் பிரபலமானவை. பாடகி சின்மயி தொடர்பாக மீ டூ பிரச்சனையில் சிக்காத வரை வைரமுத்துவிற்கு வாய்ப்புகள் அதிகமாகவே வந்து கொண்டிருந்தன.

ஆனால் இந்த பிரச்சனைக்கு பிறகு தற்சமயம் மணிரத்தினம் கூட வைரமுத்துவிற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என தெரிகிறது. வைரமுத்து ஒரு கவிஞர் என்பதால் கலைஞர் மு கருணாநிதியுடன் அவருக்கு நல்ல தொடர்பு இருந்தது ஏனெனில் கலைஞர் மு கருணாநிதியும் ஒரு கவிஞர் எழுத்தாளர் என்பது பலரும் அறிந்த விஷயம்.

இந்த நிலையில் ஒருமுறை கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கலைஞர் மு கருணாநிதி ஒவ்வொருவரிடமும் முடி வெட்ட எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என சும்மா கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது துரைமுருகன் கூறும்பொழுது நான் முடிவெட்ட 2000 ரூபாய் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

kalainger-m-karunanithi
kalainger-m-karunanithi

அதற்கடுத்து இன்னொரு அமைச்சரிடம் கேட்கும் பொழுது அவர் 1500 என்று கூறி இருக்கிறார். பிறகு வைரமுத்துவிடம் நீ முடிவெட்ட எவ்வளவு தருகிறாய் என்று கேட்டிருக்கிறார் கலைஞர், அதற்கு பதில் அளித்த வைரமுத்து எனது வீட்டிற்கு வந்தே முடிவெட்டுபவர் வெட்டிக்கொண்டு செல்வார் அதற்காக நான் அவருக்கு 1500 ரூபாய் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் வைரமுத்து.

இதை கேட்ட கலைஞர் எல்லோரும் என்ன இவ்வளவு செலவு செய்கிறீர்கள் நான் முடி வெட்டுவதற்கு எவ்வளவு கொடுக்கிறேன் தெரியுமா என்று கேட்டவர் 800 ரூபாய்க்கு அதிகமாக நான் இதுவரை முடி வெட்ட கொடுத்தது இல்லை என்று கூறியிருக்கிறார்.

அதனை கேட்டவுடன் வைரமுத்து ஐயா எவ்வளவு முடி இருக்கிறதோ அதற்கு தகுந்த தொகை தானே வாங்குவார்கள் என்று கூறியிருக்கிறார் இதை கேட்டதும் கலைஞர் மு கருணாநிதிக்கு சிரிப்பு தாங்கவில்லை இந்த நிகழ்வை வைரமுத்து ஒரு மேடை பேச்சில் பகிர்ந்துள்ளார்.

To Top