Latest News
வேலை செய்ய அழுவாதிங்கய்யா..- தேவாவை கலாய்த்துவிட்ட வாலி!
கவிஞர் கண்ணதாசனுக்கு அடுத்து அவரை போல பாடல்களுக்கு வரி எழுதும் சிறப்பான திறமை பெற்றவர் கவிஞர் வாலி. தமிழ் சினிமாவில் எந்த ஒரு சிக்கலான இசைக்கும் எளிமையாக பாடல் வரிகளை எழுத கூடியவர் வாலி. கண்ணதாசன் காலத்தில் ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா மாதிரியான ஆட்கள் இல்லாததால் சிக்கலான இசையும் இல்லை.
ஆனால் வாலி நவீன இசை பாடல்களுக்கும் பாடல் வரிகளை எழுதியவர். அவ்வை சண்முகி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவாதான் இசையமைத்தார். எப்போதும் பாடல்களுக்கு தேவா இசையமைக்கும்போது அவருக்கு தோன்றும் வரிகளை பாடல் வரிகளாக எழுதி வைத்திருப்பார்.
பாடல் ஆசிரியர்களுக்கு அந்த வரி பிடித்திருந்தால் அதை பாடலில் வைப்பார்கள். பிடிக்கவில்லை எனில் அவர்களே சொந்தமாக பாடல் வரிகளை எழுதிக்கொள்வார்கள்.
அப்படியாக அவ்வை சண்முகி திரைப்படத்தில் வேல வேல என்கிற பாடலுக்கான இசையை அமைத்தார் தேவா. அந்த சமயத்தில் அவருக்கு தோன்றும் வரியை எழுதும்போது வேல வேல வேல வேல 8 மணிக்கும் வேல, பத்து மணிக்கும் வேல என எழுதியிருந்தார்.
அதன் பிறகு அந்த இசைக்கு பாடல் எழுத வாலி வந்தார். வந்தவுடனேயே “யோவ் இந்த பாட்டுக்கு நீ ஒரு வரி எழுதி இருப்பியே, அதை கொடு” என வாங்கியவர் அதை படித்தார். படித்து முடித்துவிட்டு ஏன்யா வேலை செய்றதே கஷ்டம்ங்குற மாதிரி பாட்டு எழுதியிருக்க?
வேலை செய்ய அழுவாதிங்கய்யா… என கூறியவர், பாடல் வரிகளை வேல வேல வேல ,வேல மேல மேல வேல, வேல ஆம்பளைக்கும் வேல, , பொம்பளைக்கும் வேல , பொம்பளையா போன , ஆம்பளைக்கும் வேல என மாற்றி அமைத்தார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்