Connect with us

திருவள்ளுவருக்கா காவி சாயம் பூசுறீங்க… மத அரசியலை பிரிக்கும் வணங்கான் ட்ரைலர்!..

arun vijay vanangaan trailer

News

திருவள்ளுவருக்கா காவி சாயம் பூசுறீங்க… மத அரசியலை பிரிக்கும் வணங்கான் ட்ரைலர்!..

Social Media Bar

Vanangaan movie Trailer: பாலா இயக்கும் திரைப்படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் அந்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு என கூறலாம். ஆனால் இயக்குனர் பாலாவை பொறுத்தவரை அவர் அதிக திரைப்படங்கள் எல்லாம் இயக்க மாட்டார்.

எப்போதாவதுதான் திரைப்படம் இயக்குவார். அதே போல இயக்கும் திரைப்படங்களுக்கும் அதிக காலம் எடுத்துக்கொள்வார். இதனாலேயே அதிகபட்ச தயாரிப்பாளர்கள் இவரது திரைப்படங்களை தயாரிப்பதில்லை.

இந்த நிலையில் முதலில் சூர்யாவே தயாரித்து நடித்துதான் வணங்கான் திரைப்படம் தயாரானது. ஏனெனில் அந்த படத்தின் கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அதே சமயம் சூர்யாவிற்கும் பிதாமகன் திரைப்படம் மூலமாக நல்ல வெற்றியை கொடுத்திருந்தார் பாலா.

எனவே அந்த படத்தை தயாரித்து நடித்தார் சூர்யா. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த படத்திற்கான செலவு மிகவும் அதிகமானது. அதை பார்த்த சூர்யா படத்தில் இருந்து விலகிக்கொள்ள பிறகு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து திரைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்சமயம் வெளியாகியுள்ளது. அதில் பார்க்கும்போது இந்து மற்றும் கிருஸ்துவ மத அரசியலையும் அதற்கு எதிராக கதாநாயகன் போராடுவது போலவும் தெரிகிறது. அதே சமயம் பகுத்தறிவு தெய்வ நம்பிக்கை இரண்டிலும் நம்பிக்கை கொண்டவராக அருண் விஜய் இருப்பார் என தெரிகிறது. ஒரு காட்சியில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச நினைக்கிறார் ஒரு பெண். அவரை அடிக்கிறார் அருண் விஜய்.

ஏனெனில் ஒரு கையில் பிள்ளையாரும் மற்றொரு கையில் பெரியாரையும் அவர் வைத்திருப்பது போல காட்சி ஒன்று அமைந்துள்ளது.

To Top