News
என் பொண்ண இங்க காட்டு அங்க காட்டுன்னு சொல்றாங்க!.. விச்சித்திராவால் கடுப்பான வனிதா விஜயக்குமார்!..
ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பிறகு அதற்கு பெருவாரியான வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து வரும். அதே போலவே இந்த வருடமும் சீசன் 7 துவங்கியது முதலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
கடந்த பிக் பாஸ் சீசன்களில் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவர் பிரபலமாக இருப்பார்கள். அப்படி பிரபலமாக இருந்தவர்தான் வனிதா விஜயகுமார் தற்சமயம் அவரது மகளான ஜோவிகா விஜயகுமார், பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் பிக் பாஸில் பலருக்கும் இடையே வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்படுவது வழக்கம்தான். அது இந்த முறையும் துவங்கியுள்ளது. இந்த முறை நடிகை விசித்ராவிற்கும் ஜோவிகாவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வனிதா விஜயகுமார் பேசும்போது ”இவர்கள் என்ன அங்க ஹாஸ்டல் வார்டனாக சென்றிருக்கிறார்களா? எதற்காக அந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள். என் பெண்ணை அங்க காட்டு இங்க காட்டு என்றெல்லாம் பேசுகிறார்கள் டாட்டூ குத்தியிருப்பது ஒரு தவறான விஷயம் போல பார்க்கிறார்கள்.
இதெல்லாம் சரி கிடையாது என்று கோபமாக பேசி உள்ளார் வனிதா விஜயகுமார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது அந்த 100 நாளில் வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களை வைத்து மட்டுமே செல்ல வேண்டும். எனவே அந்த வீட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டுமே தவிர ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது தவறு என்று கூறியுள்ளார் வனிதா.
