ஊரே சிரிக்குது அப்பப்பா.. இந்த வயசுல குழந்தையா? – வீட்ல விசேஷம் ட்ரெய்லர்!

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்து வெளியாகி பிரபலமான படம் “பதாய் ஹோ” இந்த படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வெளியாகவுள்ள “வீட்டுல விசேஷம்”.

Veetla Vishesham
Social Media Bar

ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வரி, அபர்ணா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். கல்யாண வயதில் வீட்டில்  ஒரு இளம் பையன் இருக்கும்போது அவனது வயதான அம்மா கர்ப்பம் தரித்து விடுகிறார்.

இதனால் ஊர் முழுவதும் அவர்களது குடும்பத்தை கண்டு சிரிக்கும் நிலை ஏற்பட, இளைஞனின் அம்மாவோ குழந்தை பெற்றுக் கொள்வதில் உறுதியாக உள்ளார். ஊரார் வாயை பொருட்படுத்தாமல் இந்த சிக்கல்களில் இருந்து இளைஞன் தனது குடும்பத்திற்கு ஆதரவாக நடந்து கொள்வதும், தனது காதலியை கரம் பிடிப்பதுதான் கதை.

இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் காமெடியான அந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ஜூன் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.