News
ஆதி குணசேகரன் கேரக்டரையே மாத்திட்டேன்!.. பேட்டியில் ஓப்பன் செய்த வேல ராமமூர்த்தி..
சன் டிவியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கும் நாடகமாக எதிர்நீச்சல் சீரியல் உள்ளது. இந்த நாடகம் ஆரம்பித்தபோது பெரிதாக டிஆர்பி ரேட்டிங் கூட பிடிக்கவில்லை அதனால் பிரைம் டைமில் இந்த நாடகத்தை போடாமல் இரவு நேரங்களில் போட்டு வந்தார்கள்.
ஆனால் போகப் போக இந்த நாடகத்திற்கு அதிக வரவேற்பு உருவாகத் துவங்கியது. அதற்கு முக்கிய காரணம் அதில் வரும் ஆதி குணசேகரன் ஆக நடித்த நடிகர் மாரிமுத்து. மாரிமுத்துவின் தனித்துவமான நடிப்பு மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானது.
இந்த நிலையில் சில காலங்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்து காலமானார் இதனை அடுத்து யார் அடுத்த ஆதி குணசேகரனாக நடிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி இருந்து வந்தது தற்சமயம் நடிகர் வேலராம மூர்த்தி ஆதி குணசேகரனாக நடிக்க துவங்கி உள்ளார்.
இது குறித்து இவர் பேட்டியில் கூறும்போது நான் ஆதி குணசேகரனாக நடித்தால் அது அது மாரிமுத்து போல இருக்காது மாரிமுத்து நடிப்பு எப்படி இருக்கும் என்று மக்களுக்கு தெரியும். அதைப்போல என் நடிப்பு எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.
எனவே நான் இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை எனக்கு தகுந்தார் போல மாற்றி விடுவேன். எனவே நான் நடிக்கும் பொழுது ஆதி குணசேகரன் கதாபாத்திரமே வேறு மாதிரிதான் இருக்கும் என்று கூறியுள்ளார் அதற்கு ஏற்றார் போல நேற்று எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனின் குணமே மாறி இருப்பதையும் பார்க்க முடிந்தது.
