விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கடேஷ் பட். வெங்கடேஷ் பட் கிட்டத்தட்ட பல வருடங்களாகவே விஜய் டிவியில் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்சமயம் சன் டிவிக்கு அவர் மாறியிருப்பது பலருக்குமே அதிர்ச்சியை கொடுக்கும் சம்பவமாக அமைந்திருந்தது.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் டாப் குக் டூப் குக் என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் வெங்கடேஷ் பட். அவர் ஒரு பேட்டியில் பேசும்போது அவருக்கு நிறுவனங்களிடம் இருந்து வந்த வாய்ப்புகள் குறித்து பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது, ”நான் பிரபலமான பிறகு நிறைய உணவு தயாரிப்பு நிறுவனங்கள் என்னை அணுகி அவர்கள் நிறுவனத்திற்கு ப்ராண்ட் அம்பாசிட்டராக இருக்கும்படி கேட்டனர். 2 நிமிடத்தில் நூடுல்ஸ் செய்யும் நிறுவனம் ஒன்று மூன்று கோடி ரூபாய் தருவதாக கூறி பல வருடங்களாக என்னிடம் கேட்டு வந்தனர்.

ஆனால் ஏனோ எனக்கு அதில் உடன்பாடு இல்லை எனவே நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் கேன்சரை ஏற்படுத்தும் கெமிக்கல் இருப்பதாக குற்றச்சாட்டு வந்தது. சாமிதான் என்னை இந்த மாதிரி நிறுவனங்களிடம் இருந்து காப்பாற்றுகிறது.
இதே போல நிறைய நிறுவனங்கள் என்னிடம் கேட்டிருக்கின்றன ஆனால் அவை கெமிக்கலை சேர்ப்பவையாக இருக்கும், குறைவான தரத்தில் உள்ள உணவுகளை வழங்குபவையாக இருக்கும்.
அவற்றிற்கெல்லாம் நான் விளம்பரம் செய்ய மாட்டேன். சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் என் குழந்தைக்கு அந்த உணவை கொடுக்கலாம் என நான் நினைக்கும் உணவை மட்டும்தான் நான் விளம்பரம் செய்வேன்” என கூறுகிறார் வெங்கடேஷ் பட்.








