Tamil Cinema News
ஹிந்தி பட சான்ஸையே நிராகரித்த வெற்றிமாறன்.. இந்த விதிமுறைதான் காரணம்.!
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய வரவேற்புகளை பெற்று வருகிறார். வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அதற்கென்று தனி வரவேற்பு இருந்து வருகிறது.
சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் கூட நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலும் வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அதில் ஏதாவது ஒரு விஷயம் பேசப்பட்டிருக்கும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது.
ஆனால் வெற்றிமாறனுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு அவர் நிறைய நேரம் எடுத்துக் கொள்வார் இந்த நிலையில் வெற்றிமாறன் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சில விஷயங்களை கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது விடுதலை திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறனுக்கு எக்கச்சக்கமாக வாய்ப்புகள் வந்தது. ஹிந்தி சினிமாவில் கூட அவரை படம் இயக்குவதற்கு அழைத்தனர்.
ஆனால் எனக்கு ஏற்கனவே வாடிவாசல் திரைப்படத்தை தயாரித்து தருவதாக அவர் வாக்களித்து இருக்கிறார் சூர்யா 45 திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த ஒரு காரணத்தினால் வாடிவாசல் முடித்துவிட்டுதான் அடுத்த படத்தில் கமிட் ஆவேன் என்று தனக்குள்ளையே ஒரு விதிமுறையை போட்டு இருக்கிறார் வெற்றிமாறன். அதனால் பெரிய பெரிய பட வாய்ப்புகளை கூட அவர் நிராகரித்துவிட்டார் என்று கூறியிருக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு.
