Connect with us

அந்த 10 நாள் உங்க எதிரி கூடத்தான் நடிக்கணும்!.. சூர்யாவிற்கு செக் வைத்த வெற்றிமாறன்!..

vetrimaaran surya

News

அந்த 10 நாள் உங்க எதிரி கூடத்தான் நடிக்கணும்!.. சூர்யாவிற்கு செக் வைத்த வெற்றிமாறன்!..

Social Media Bar

Surya and Vetrimaaran : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படம் வாடிவாசல். சிசு செல்லப்பா என்னும் எழுத்தாளர் எழுதிய வாடிவாசல் என்னும் நாவலின் தழுவலாக இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது.

ஆனால் தற்சமயம் ஏற்பட்ட அமீர் பருத்திவீரன் பிரச்சனை இந்த படத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் வாடிவாசல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அமீரும் நடிக்கிறார்.

அமீருக்கும் கார்த்திக்கும் இருக்கும் பகையின் காரணமாக இந்த திரைப்படத்தில் பிரச்சனை ஏற்படலாம் என்று பேச்சுக்கள் இருந்தது. ஆனால் வெற்றிமாறனை பொறுத்தவரை அவர் அமீரின் நீண்ட நாள் நண்பர் என்பதால் அவர் சூர்யாவிற்கு பதிலாக வேறு கதாநாயகனை மாற்றுவார் என்று பேச்சுக்கள் இருந்தன.

ஆனாலும் சூர்யா இந்த படத்தில் நடிப்பதில் வெகு தீவிரமாக இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன இந்த நிலையில் அடுத்து ஒரு ஆங்கிலத் திரைப்படத்தில் நடிப்பதற்கு சூர்யாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்த திரைப்படத்தில் நடிக்க துவங்கிய பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகக்கூடாது என்று அந்த பட நிறுவனம் அவருக்கு விதிமுறை போட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பை கொஞ்சம் ஆரம்பித்து வைத்துவிட்டு அந்த ஆங்கில படத்திற்கு நடிக்க சென்றால் இடையில் வந்து வாடி வாசலிலும் நடித்துக் கொள்ளலாம் என்பது சூர்யாவின் விருப்பமாக இருக்கிறது. இதனை அறிந்த வெற்றிமாறன் ஒரு பத்து நாள் மட்டும் படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்று கூறி இருக்கிறார்.

ameer
ameer

அந்த பத்து நாளும் இயக்குனர் அமீர் மற்றும் சூர்யா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைதான் எடுக்கப் போகிறார் என்ற பேச்சுக்கள் இருக்கின்றன ஏனெனில் மற்ற காட்சிகளை எடுத்த பிறகு சூர்யா இறுதியில் அமீருடன் நடிக்க மாட்டேன் என்று கூறினால் வேறு வழியில்லாமல் அமீருக்கு பதிலாக வேறு ஆளை நடிக்க வைக்க வேண்டி இருக்கும்.

எனவே முதலிலேயே அமீருடன் கூடிய காட்சிகளை எடுத்துவிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் வெற்றிமாறன். இந்த பத்து நாள் படப்பிடிப்பு நடிக்காவிட்டால் சூர்யாவால் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போகலாம் எனவே வேறு வழியின்றி சூர்யா நடிப்பார் என்பதற்காகதான் வெற்றிமாறன் இப்படி செய்கிறார் என்று பேசப்படுகிறது.

To Top