நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து இப்பொழுது கதாநாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான காமெடி கதைகள் அதிக வெற்றியை பெற்றுக் கொடுக்கின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் திரைப்படத்தில் தனது அனுபவம் குறித்து சந்தானம் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் போது வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்தில் நடிப்பதற்கு நான் வேண்டாம் என்றுதான் ஆரம்பத்தில் கூறினார்.
அதை என்னிடமே நேரடியாக கூறினார். அவர் கூறும் பொழுது கருணாஸிற்கு மட்டும் தான் நான் இந்த படத்தில் காட்சிகள் எழுதி இருக்கிறேன். உங்களுக்கு காட்சிகளே எழுதவில்லை எனில் இந்த படத்தில் காமெடிக்கு பெரிதாக அவசியம் இல்லை.
ஆனாலும் தயாரிப்பாளர் சொன்னார் என்று தான் உங்களை சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தில் கருணாஸை உங்களின் நண்பராக சேர்த்திருக்கிறேன். அதை தவிர்த்து உங்களுக்கென்று எதுவும் எழுதவில்லை என்று கூறினார்.
நானும் படத்தில் நடிக்கும் பொழுது அவரிடம் இப்படி ஒரு காமெடி பேசலாமா என்று ஒவ்வொரு முறையும் கேட்டுக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி காமெடி காட்சிகளில் நடித்தேன். நடித்த படம் சிறப்பாக இருந்ததால் அந்த காமெடி காட்சிகளும் வொர்க் அவுட் ஆனது என்று கூறியிருக்கிறார் சந்தானம்.









