Latest News
விடுதலை திரைப்படம் வீரப்பனின் கதைதான்… குறிப்புகளை சரியாக கண்டுப்பிடித்த நெட்டிசன்கள்!.
Director vetrimaaran: தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் விடுதலை. பொதுவாகவே வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு பெரும் விஷயத்தை பேசக்கூடியதாக இருக்கும்.
உதாரணமாக ஆடுகளம் திரைப்படத்தை பொறுத்தவரை இதுவரை சேவல் சண்டை குறித்து நாம் காணாத உலகை அவர் காட்டியிருப்பார். இந்த நிலையில் விடுதலை கதை ஒரு கற்பனை கதையே என போட்டுதான் அந்த படத்தை ஆரம்பித்திருந்தார் வெற்றிமாறன்.
ஆனால் அந்த திரைப்படம் குறித்து பல சர்ச்சைகள் அப்போதே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்சமயம் வீரப்பன் குறித்து வரும் ஆவணப்படங்களை பார்க்கும்போது விடுதலை முழுக்க முழுக்க வீரப்பனின் கதையை கொண்டு எடுக்கப்பட்டதே என கூறுகின்றனர் ரசிகர்கள்.
விடுதலை திரைப்படத்தில் விஜய் சேதுபதியை பிடிப்பதற்காக வதை முகாம்களை அமைத்து அதில் அந்த கிராம மக்களை வதைத்து கொண்டிருப்பார்கள். அதை போலவே வீரப்பனை பிடிக்க வந்த போலீஸ் குழு பல இடங்களில் வதை முகாம்கள் அமைத்து அதில் மக்களை கொடுமைப்படுத்தி இருக்கின்றனர்.
ஒருமுறை காவலரால் கோபமான வீரப்பன் ஒரு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அங்குள்ள காவலர்களை கொலை செய்திருக்கிறார். கிட்டத்தட்ட அதே காட்சி இந்த விடுதலை திரைப்படத்திலும் இருக்கிறது. தமிழக வரலாற்றிலேயே வதை முகாம் அமைத்து காவலர்கள் பொதுமக்களை கொடுமைப்படுத்தியது வீரப்பனை பிடிக்கதான் என கூறப்படுகிறது.
எனவே கண்டிப்பாக விடுதலை திரைப்படம் வீரப்பன் கதையை அடிப்படையாக கொண்டதுதான் என கூறுகின்றனர் நெட்டிசன்கள். தற்சமயம் வெளிவந்த கூஸ் முனுசாமி வீரப்பன் என்னும் தொடரால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்