Latest News
ரஜினி படத்துலையும் இதெல்லாம் பேச முடியும்.. வேட்டையன் படத்தில் சொன்ன அந்த விஷயத்தை கவனிச்சீங்களா?
என்னதான் சமூகநீதி இயக்குனர்களாக இருந்தாலும் கூட பெரிய நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கும்போது அதில் சமூக நீதியை பெரிதாக பேசமாட்டார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே ஜெய் பீம் என்கிற சமூகநீதி திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் தா.செ ஞானவேல் இவர் ரஜினியை வைத்து இயக்கியிருக்கும் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தில் இவர் சமூகநீதியை பேசி இருப்பாரா என்பது பலரது கேள்வியாக இருந்தது. மொத்த திரைப்படத்திலும் ஒரு 20 நிமிடம்தான் முக்கியமான விஷயங்களை தா.செ ஞானவேல் பேசியிருந்தார். மற்றபடி இது முழுக்க முழுக்க ரஜினி படமாகதான் தயாராகி இருந்தது.
ரஜினி படத்தில் இதை பேசலாம்:
ஆனால் நடுவே பேச வேண்டிய முக்கியமான விஷயங்களை தாசே ஞானவேல் பேசியிருந்ததை பார்க்க முடிந்தது. முக்கியமாக முதல் பாதியில் படத்தில் ரஜினிதான் பல தவறுகளை செய்பவராக இருப்பார். பிறகு அவரே மனம் திருந்துபவராக வைத்திருந்தது நன்றாக இருந்தது.
மேலும் பல காட்சிகளில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இங்கு என்கவுண்டர்கள் நிகழ்கின்றன. என்றைக்குமே ஒரு பணக்காரனை ஏன் என்கவுண்டர் செய்ததில்லை என்கிற ஒரு மிக வலுவான கேள்வியை எழுப்பி இருந்தார் ஞானவேல்.
அதேபோல சேரி மக்கள் என்றாலே அவர்களை தவறாக பார்க்கும் கண்ணோட்டத்தையும் கேள்விக்கு உள்ளாக்கி இருந்தார். இந்த விஷயங்கள் எல்லாம் இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான விஷயமாக இருக்கின்றன இதனை அடுத்து வேட்டையன் திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்