Box Office
பத்திக்கிச்சு ஒரு ராட்சஸ வெடி – முதல் நாள் கலெக்ஷனில் பட்டையை கிளப்பிய விடாமுயற்சி.!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே தற்சமயம் திரையில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது விடாமுயற்சி திரைப்படம். விடாமுயற்சி திரைப்படம் மீது அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே அந்த திரைப்படத்தின் இயக்குனரான மகிழ் திருமேனிதான்.
இதற்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கிய தடம், தடையற தாக்க, கலக தலைவன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அப்படியிருக்கையில் கண்டிப்பாக அஜித்தை வைத்து மாஸ் படத்தைதான் பண்ணியிருப்பார் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதற்கு தகுந்தாற் போல முதல் நாளிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது விடாமுயற்சி திரைப்படம். அஜித் மற்றும் அவரது மனைவி த்ரிஷா இருவரும் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது அவரது கார் ப்ரேக் டவுன் ஆகிவிடுகிறது.
அப்போது அவரது மனைவி காணாமல் போகிறார். அவரை கண்டறிவதை வைத்து கதை செல்கிறது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 22 கோடி ரூபாய் மொத்தமாக வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் 3600 திரையரங்குகளிலும் மற்ற மொழிகளில் 800 திரையரங்குகளிலும் வெளியானது விடாமுயற்சி திரைப்படம்.
இதில் 60 சதவீதம் லாபத்தை தமிழ்நாட்டில் மட்டும் ஈட்டியுள்ளது விடாமுயற்சி திரைப்படம்.
