விடாமுயற்சிக்கு வந்த சங்கடம்.. குறுக்கே வந்த தெலுங்கு திரைப்படம்.!

ஒரு வருடத்திற்கு மேலாகவே தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாமல் இருந்து வருகிறது. ஏனெனில் துணிவு திரைப்படத்தை முடித்த உடனேயே நடிகர் அஜித் பைக் பயணம் செல்கிறேன் என்று உலகத்தை சுற்றி பார்க்க சென்று விட்டார்.

அதனால் சில நாட்கள் அவர் படப்பிடிப்புக்கு வராமல் இருந்தார். அதற்கு பிறகு விக்னேஷ் சிவன் அவரை வைத்து திரைப்படம் இயக்குவதாக இருந்தது. விக்னேஷ் சிவன் எழுதிய கதை பிடிக்காத காரணத்தினால் பிறகு மகிழ் திருமேனியை மாற்றினார் அஜித்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் விடாமுயற்சி. இந்த படம் எடுப்பதற்கு நிறைய தாமதமானதால் அதற்கு விஜய் நடித்த லியோ திரைப்படம் திரையரங்கிற்கு வந்துவிட்டது. பிறகு விடாமுயற்சி படப்பிடிப்பிலும் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டன.

Social Media Bar

வெளியாவதில் தாமதம்:

இந்த காரணத்தினால் அது வெளியாவதிலும் தாமதம் ஏற்பட்டது. தற்சமயம் குட் பேட் அக்லி என்ற இன்னொரு திரைப்படத்திலும் நடிக்க துவங்கி விட்டார் அஜித். ஆனால் விடாமுயற்சி திரைப்படம் மட்டும் இன்னும் திரையரங்கிற்கு வரவில்லை.

இந்த நிலையில் இந்தத் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொங்கல் அன்று இயக்குனர் சங்கர் இயக்கி வெளியாக இருக்கும் கேம் சேஞ்சர். இந்த திரைப்படம் பலருக்கும் பயத்தை கொடுத்திருக்கிறது எப்படியும் அதிக திரையரங்குகளில் ஓடும் அதனால் அஜித்தின் திரைப்படத்திற்கு வரவேற்பு குறையும் என்பதால் விடாமுயற்சி திரைப்படத்தின் தேதியை தள்ளி வைப்பதற்கு பட குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.