ஆதிக்க வர்க்கத்துக்கு எதிரான சவுக்கடி… விடுதலை 2 ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரமாகவும் இரண்டாம் கதாபாத்திரமாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தார்.
சூரி கதாநாயகனாக நடித்திருந்தாலும் கூட இந்த படத்தின் கதைகளம் சிறப்பாக இருந்தது. மேலும் சூரியக்க கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரமும் சிறப்பாக இருந்தது. இதனால் இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வந்தது இரண்டாம் பாகத்தை பொருத்தவரை இதில் விஜய் சேதுபதிதான் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார்.
இரண்டாம் பாகம்:

இந்த படத்தில் இளையராஜா இசையமைத்து பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதற்கே அதிக வரவேற்பு கிடைத்து இருந்தது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது மிகப்பெரும் அரசியலை பேசும் ஒரு படமாக விடுதலை 2 இருக்கிறது என்பதை வழிகாட்டுகிறது.
ட்ரைலரின் படி சாதி வர்க்கம் என்று பேசி ஆதிக்கம் செய்யும் ஆட்களுக்கு எதிராக போராடும் ஒரு போராளியாக தான் விஜய் சேதுபதி முதலில் உருவாகிறார். பிறகு அரசியல் காரணங்களுக்காக அவர் எப்படி கெட்டவராக காண்பிக்கப்படுகிறார் என்பதை பற்றி படம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் விஜய் சேதுபதியின் கடந்த கால வாழ்க்கை மற்றும் நிகழ்காலத்தில் சூரிக்கும் விஜய் சேதுபதியும் நடக்கும் விஷயங்கள் ஆகியவை கொண்டு கதை செல்கின்றன.